யாழ். இந்துக்கல்லூரி ஆசிரியையின் மரணத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை இளவாலைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சில்லாலை பகுதியைச் சேர்ந்த ராஜசெல்வன் என்பவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டே இளம் ஆசிரியை மரணமடைந்துள்ளார் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளவாலை பொலிஸார் குறித்த ஆசிரியையின் காதலன் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுறது.
குறித்த சந்தேகநபர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளர்.
கடந்த 8 ஆம் திகதி யாழ். இந்துக்கல்லூரியின் ஆசிரியையான செல்வராஜா அனுஷா என்ற இந்த யுவதி வீட்டில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









0 comments:
Post a Comment