Premium WordPress Themes

Wednesday, 20 April 2011

மரணமடைந்த யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்

யாழ்ப்பாணம் சில்லாலைப்பகுதியில் கடந்த வாரம் மர்மமான முறையில் மரணமடைந்த யாழ். இந்துக்கல்லூரி இளம் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என பிரதேச பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக இதற்கு முன்னர் தமிழ் சி.என்.என் செய்திப்பிரிவு முழுமையான தகவல்களை வெளியிட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போதே வெளியிடப்பட்டுள்ளது. 

யாழ். இந்துக்கல்லூரியின் ஆசிரியையான 27 வயதுடைய செல்வராசா அனுஷா என்ற இந்த யுவதி கடந்த 8ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

இவரது மரணம் குறித்து பல்வேறு விதமான சந்தேகங்கள் நிலவியது. இந்நிலையில் குறித்த இளம் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. 

முன்னர் சட்ட வைத்திய அதிகாரி எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி...
 
குறித்த ஆசிரியையின் வீட்டிற்கு அருகில் இராணுவ காவல் அரண் உள்ளதாகவும், இக்கொலையுடன் இராணுவத்தினரே சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment