Premium WordPress Themes

Monday, 18 April 2011

யாழில் இன்று திடீரெனப் பெய்த கடும் மழை! (காணொளி, பட இணைப்பு)

நாட்டின் பல பாகங்களில் கடும் வெப்பம் நிலவிவரும் வேளையில் இன்று யாழில் திடீரென சில மணிநேரம் கடும் மழை பெய்துள்ளது. 

பூமியின் அருகே சூரியன் நெருங்கியுள்ளதால் கடந்தவாரம் முதல் இலங்கையின் பல பாகங்களில் வழமைக்கு மாறாக கடுமையான வெயில் காணப்படுகிறது. 

இதனால் யாழ்ப்பாணத்திலும் கடுமையான வெப்பம் நிலவிவந்தது. ஆனால் இன்று முற்பகல் திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 

கடுமையான வெயிலுக்கு மத்தியில் மழை பெய்யத் தொடங்கிய போதும் சிறிது நேரத்தில் மழை ஓய்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இதேவேளை நாட்டின் சகல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment