Premium WordPress Themes

Tuesday, 19 April 2011

இலங்கை தமிழனின் கேள்விக்கணையில் மரணித்த சிறீலங்காவின் ஐ.நா தூதுவர் பாலித்த கோஹோன

அமெரிக்காவில் வைத்து சிறீலங்காவின் ஐ.நாவிற்கான தூதுவர் பாலித கோஹேனவுக்கு தன் பேச்சாற்றல் மூலமாக பல கேள்விக் கணைகளைத் தொடுத்து நல்ல படம் புகட்டியுள்ளார் அமெரிக்க ஈழத் தமிழன் ஒருவர். 

Maxwell School of syracuse பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இலங்கையின் சமாதான அபிவிருத்தி சம்பந்தமான ஒரு கலந்துரையாடலிலேயே அமெரிக்க தமிழன் Dr. க. அருளானந்தம் தன் கேள்வி்க் கணைகள் மூலம் பாலிதவை வாயடைக்க வைத்தார்.

இக் கலந்துரையாடலில் இலங்கையின் ஐ.நாவுக்கான தூதுவர் பாலித கோஹேன, அமெரிக்க ஈழத் தமிழன் Dr. க. அருளானந்தம், Maxwell School of syracuse பல்கலைக் கழகத்தின் சமூக முரண்பாடுகளுக்கான பேராசிரியர்  Dr. எல். க்ரிஸ்பேக் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

Peace Building in Sri Lanka


நாங்கள் என்ன செய்தோம், எதை செய்யலாம் ? என Dr. க. அருளானந்தம்  ஒரு தனி மனிதனாக ஒரு அரசுக்கே சவால் விடுகிறார் என்றால், அவர் பேச்சில் இருக்கும் ராஜதந்திரம் அவர் திறமைக்கு ஒரு சாட்சி.



சீறிக் கொண்டு வந்த பாலிதவை கடைசியில் “உங்களோடு சமாதானம் பேச முடித்து” என்று கத்தும் அளவுக்கு இவரின் ஆளுமை கொண்டு சென்றுவிட்டது .

ஐக்கிய இலங்கைக்காக என்றும் வேலை செய்வோம் என்று பல்கலைக்கழக பேராசிரியர் Dr. எல். க்ரிஸ்பேக் கடைசியில் கூறியமையும் ஒரு பெடரல் முறைமை தான் தீர்வு என கூறி நிற்பதாக கொள்ளலாம். 

இப்படிப்பட்ட தலைவர்களை தட்டி கொடுத்து வளர்க்க வேண்டிய கடமைப்பாடும் தேவையும் எங்களுக்கு உண்டு. துப்பாக்கியை விடவும் பேனையும் பேச்சும் ஆயிரம் மடங்கு பலம் மிக்கது என்பது இவரது பேச்சும் கேள்விக் கணைகள் மூலம் புரிந்திருக்கும்.

0 comments:

Post a Comment