Premium WordPress Themes

Monday, 18 April 2011

காடுமண்டிக் கிடக்கும் தமிழர் பிரதேசத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

இடம்பெற்ற யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சின்னபின்னமான எங்களின் தமிழ்ச் சமூகம் மீண்டு வர முடியாமல் தத்தளிக்கும் காட்சிகள் பார்ப்போரின் கண்களில் நிச்சயம் கண்ணீரைப் பனிக்கச் செய்யும். 

எமது தமிழ் சி.என்.என் செய்திப்பிரிவின் விசேட அணியினரால் எடுக்கப்பட்ட படங்களே இவை... 

நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் படங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கின் இன்றைய நிலைமைகள் தொடர்பானது. 

தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்வதாகக் கூறி உலக நாடுகள் முழுவது பறந்து திரிந்து பணம் வசூலிக்கும் மஹிந்தரும் அவரின் பட்டாளங்களும் சேகரித்த நிதியை எங்கே கொண்டு போய் முதலிடுகிறார்கள் என்பது தான் தமிழ் மக்கள் மத்தியில் எழும் பாரிய கேள்வியாகக் காணப்படுகின்றது. 



அரசினால் எந்தவித அபிவிருத்தியும் இப்பகுதியில் செய்யப்படவில்லை. இலங்கையின் வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசம் உண்மையிலேயே இன்று வரை மக்கள் நிம்மதியாக வாழ முடியாத ஒரு இடமாகக் காணப்படுகின்றது. 



தமிழர்கள் காலா காலமாக பாரம்பரியமாக வாழ்ந்து வந்த ஒரு பிரதேசம் இன்று காடு மண்டிப் போய் விலங்குகள் கூட வாழ முடியாத ஒரு பிரதேசமாகக் காணப்படுகின்றது. 

இறுதி யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும் இன்று வரை மஹிந்த அரசினால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதியாகவே இந்தப் பிரதேசம் காணப்படுகின்றது. 

இந்தப் பிரதேசங்களின் இன்றைய நிலைமைகளைப் பார்க்கும் போது உண்மையிலே அரச நிர்வாகம் இயங்குகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது. 

இதனைப் பார்க்கும் போது மஹிந்த அரசின் தமிழ் மக்கள் அவர்களின் வாழ்விடங்கள் மீதான திட்டமிட்ட புறக்கணிப்பும் அபிவிருத்தியில் காட்டப்படும் அக்கறையின்மைகளும் தெளிவாகத் தெரிகின்றது. 



அங்குள்ள சமூக கட்டமைப்புக்கள் எவ்வாறு காணப்படுகின்றன? அரச நிர்வாக அலுவலகங்கள், உள்ளூராட்சி அமைப்புக்கள், பொதுப்பணித் துறைகள், கல்வி, நீர்விநியோகம், விளையாட்டு, கோவில்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் கூட சிதைந்து சின்னாபின்னமாகக் காட்சியளிக்கின்றது. 

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இப்பிரதேசம் மீண்டெழுவதற்க்கான அறிகுறியே இல்லாமல் இருக்கின்றது. மஹிந்த சிந்தனைக்கு இப்படியான தமிழ்ப் பிரதேசங்கள் விதிவிலக்கு போலும்.. 



ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த மண் இன்று அதன் சோபையை இழந்து சிங்கள இராணுவத்தின் முகாம்களும் ஆக்கிரமிப்புக்களும் நிறைந்த ஒரு வனாந்தரமாகக் காட்சியளிக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான கொடிய போரில் சிங்களத்தின் பக்கம் நின்ற உலக நாடுகளின் கண்களுக்கும் கூட இந்தப் பிரதேசங்கள் கண்களில் படவில்லை. 



தமிழர்களின் பெயரைச் சொல்லி சேகரிக்கப்படும் நிதி சிங்களப் பகுதிகளில் விமானநிலையங்களாகவும், துறைமுகங்களாகவும், பெருந்தெருக்களாகவும் மற்றும் பல்வேறு வகையான அபிவிருத்திப் பணிகளுக்கும் முழு வீச்சுடன் செலவளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 



இதனை சர்வதேசமும் கண்டும் காணதது போல இருக்கின்றது. சர்வதேசமோ சிங்களமோ தமிழர்களுக்கு எப்போதும் விடிவினைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பதனையே தமிழர் பிரதேசங்களின் இத்தகைய காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன. 

நாளைய பிஞ்சுகளின் எதிர்காலம்?

0 comments:

Post a Comment