Premium WordPress Themes

Saturday, 30 April 2011

தமிழ் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பின் சுத்துமாத்துக்கள் அம்பலம்!

இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை சட்ட சிக்கலில் அகப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை அரசு. 

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழருக்கு ஆதரவாக செயற்படும் போது இந்தியா இலங்கை அரசு தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் இலங்கைக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. 

ஐ.நாவின் சட்ட சிக்கலில் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொள்ள இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாக பயன்படுத்த உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. 
தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து இலங்கை அரசு ஒரு தீர்வை நோக்கி சாதகமாக நகர்வதாக இந்தியாவுக்கு காட்டி இந்தியாவை தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து ஏமாற்றி தனது விடயத்தை சாதிக்க முற்படுவதாக அறிய முடிகிறது. 

இதற்கு துணை போவது போன்ற கருத்துகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். 



நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் உலகம் எங்கும் நடந்த பேச்சுகள் தடைபட்ட நிலையில் நோர்வே அரசின் அனுசரனையுடன் விட்ட இடத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்த்துடன் இந்தியாவில் அல்லது வேறு ஒரு நாட்டில் பேச்சுகள் நடப்பதே வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயமாகும். 

அதைவிடுத்து தமிழருடன் அதிகாரங்களைப் பகிர அரசு கொள்கையளவில் இணக்கம் எனவும் அதிகாரங்களின் பட்டியல் பற்றி அடுத்தடுத்த கட்டங்களில் பேச்சு எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை குழப்பும் வேலைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது சிறந்தது.

இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது எனவும் எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன என வெளியான செய்திகளால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். 

அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். 

இது இந்தியாவின் இலங்கை அரசுக்கு எதிரான காய் நகர்த்தல்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் நாசகார வேலையா என சிந்திக்க தோன்றுகின்றது 



தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசு நடாத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாக முக்கியமாக வெளிநாடொன்றின் மத்தியஸ்தத்துடன் தொடர்ந்து தமிழ் மக்களின் அரசியல் பேச்சுக்கள் நகர வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது...

ஆனால் அன்று சொன்னது ஒன்று இன்று செய்வது இன்னொன்று.. 

அண்மையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான அணியினர் கூட்டமைப்பையும், தமிழ்மக்களையும் சேர்த்து மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பதற்கான வெள்ளோட்டத்தை மிகவும் இரகசியமான முறையில் சிங்கப்பூரில் போய் நடத்தி விட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது...

ஐநா நிபுணர் குழு அறிக்கை வெளியாகி உலகமெங்கும் மஹிந்த அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கக் வேண்டும் என்று இலங்கை அரசுக்கெதிரான கோஷங்கள் வலுத்து வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இத்தகைய கேவலமான செயல் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

போர் முடிந்து 2 1/2 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை காலமும் அதிகாரப் பகிர்வு விடயத்தையே கையில் எடுக்காத அரசு இப்போது எடுத்துப் பேசுவதன் மர்மத்தை இவர்கள் அறிய மாட்டார்களா? 

மஹிந்த அரசின் சாதுரியமான காய் நகர்த்தல்களுக்குள் தெரிந்தோ தெரியாமலோ மாட்டுப்பட்டு உள்ளார்கள் கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்பவர்கள்... 



சாதாரண தமிழனுக்கு தெரிந்த அரசியல் இராஜதந்திரம் கூட இவர்களுக்குத் தெரியாதா என்ன? 

வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக இலங்கை அரசு கூண்டோடு சர்வதேசம் முன்பு ஏற்றப்படப் போகும் இந்த நேரத்தில் கூட்டமைப்பின் இச்செயல் மஹிந்த அரசை போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு துருப்புச் சீட்டாக அமைந்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் மட்டும் தான் தேசியம் வாழ்ந்து கொண்டிருக்கிறது... அதன் செயலில் அறவே இல்லை.. 

உலகத் தமிழர்களே இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.. 

நல்ல விலைக்கு வந்தால் விலைபேசி ஒட்டு மொத்தமாக உங்களையும் விற்றுவிடுவார்கள்.. 

இந்தக் கண்கொத்திப் பாம்புகளிடம் கவனமாக இருங்கள்...

0 comments:

Post a Comment