Premium WordPress Themes

Wednesday, 27 April 2011

தனித் தமிழீழமே தி.மு.கவின் குறிக்கோள் மு.கருணாநிதி தெரிவிப்பு

தனித் தமிழீழமே தி.மு.கவின் குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் கருணாநிதி இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையின் யுத்தக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

இதனால் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். 

இலங்கை யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. 

இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன. 

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். 

போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என மத்திய அரசை தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்க என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் கோரமான இறுதி யுத்தம் நடந்த போது எதுவும் பேசாமல் இத்தாலி சோனியாவைத் திருப்திப்படுத்தவும் முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றவும் ஒரு இலட்சம் தமிழர்கள் பலியாவதைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழினத் துரோகி கருணாநிதி விடும் புதுக்கதையைப் பாருங்கள் உலகத் தமிழ் உறவுகளே..

0 comments:

Post a Comment