Premium WordPress Themes

Friday, 29 April 2011

விடுதலைப்புலிகள் சுதந்திரப் போராளிகள், ஒழுக்கமானவர்கள் - ஐ.நா அறிக்கை! ஏற்க மறுக்கும் அரசு

தமிழீழ விடுதலைப்புலிகளை உலகத்திலேயே ஒழுக்கமானவர்கள் என்று தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது நிபுணர்குழு தொடர்பான அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று ஊடகவியலாளர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் 8 ஆம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள் என்றும் உலகிலேயே மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இப்படிப்பட்ட அறிக்கையை நாம் எவ்வாறு ஏற்பது என ஊடகவியலாளர் மத்தியில் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வி எழுப்பினார். 

இதேபோன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் புலிகளை ஒழுக்கமானவர்கள் என்று கூறிய அறிக்கையை தமது அரசு ஏற்காது என்று கூறியிருந்தார். 



மேலும் ஐ.நாவின் அறிக்கைக்கு எதிரான பேரணிகளை நடத்தும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது என்று ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment