உலகின் செல்வாக்குமிக்க 100 பேரை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரைம்ஸ் பத்திரிகை இணையத்தள வாக்கெடுப்பு நடத்துவது குறிப்பிடத்தக்கது.
'மேன் ஆஃப் தி இயர்’ ஆக தெரிவு செய்யப்படுபவர்களின் படங்கள் ரைம்ஸ் பத்திரிகையின் அட்டையில் பிரசுரிக்கப்படும்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் இந்த முன்னணிப் பத்திரிகையில் தமது படம் வெளியாவதை புகழாக நினைப்பர்.
ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய இணைய வாக்கெடுப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் இடம்பெற்றுள்ளதாகவும், 2 இலட்சத்து 3 ஆயிரத்து 117 வாக்குகளைப் பெற்று 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூவ இணையத்தளத்தில் ஆர்ப்பாட்டமாக செய்திகளை வெளியிட்டன.
பயங்கரவாதத்துக்கு எதிராக ராஜபக்ஸ எடுத்த நடவடிக்கைகளுக்கும், ஜனநாயகம் செழிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம் இது என்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டுருந்தது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 40 ஆவது இடத்திலும், காங்கிரஸ் தலைவர் சோனியா 100 ஆவது இடத்திலும் பின்தங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி பெருமையடித்தன.
ஆனால் ஏப்ரல் 21 ஆம் திகதி இணையத்தள வாக்கெடுப்பு முடிவுற்றுள்ளதாகவும் அறிவித்து, அதற்கு அடுத்தநாள் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் இருந்து மகிந்த ராஜபக்ஸ நீக்கப்பட்டுள்ளதாகவும் ரைம்ஸ் சஞ்சிகை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எனினும் இதற்கான காரணத்தை ரைம்ஸ் சஞ்சிகை அறிவிக்கவில்லை.
ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய போட்டியிலிருந்து மகிந்த ராஜபக்ஸ நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரைம்ஸ் சஞ்சிகை தெளிவுபடுத்தவேண்டும் என்று இது வேண்டும் என்றே நீக்கப்பட்டதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.
செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ஸவின் பெயர் இடம்பெற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரைம்ஸ் பத்திரிகைக்கு பல்வேறு கண்டனங்கள் குவிந்தன.
இணையத்தள வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ஸ எவ்வாறு முன்னேறினார் என்பதில் பலரும் சந்தேகம் வெளியிட்டனர். இதனால் ரைம்ஸ் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் தமது தொழில்நுட்பக் குழுவிடம் இவ்விடயம் குறித்து ஆராயும்படி பணிப்புரை விடுத்தது.
அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில் தான், இலங்கை இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைக் கையில் வைத்துக் கொண்டு ராஜபக்ஸ நடத்திய தில்லுமுல்லு அம்பலமாகி வெளிச்சமாகியது.
ராஜபக்ஸவின் கைத்தடிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவருக்கு ஆதரவாகக் கள்ள வாக்குப் போட்டுள்ளனர்.
இலங்கையில் இராணுவத்தின் தொழில்நுட்பத் துறையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் இந்தப் பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ராஜபக்ஸவுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் அவ்வளவும் கொத்துக் கொத்தாக விழுந்து இருப்பதைக் கண்டுபிடித்த ரைம்ஸ் தொழில்நுட்பக் குழு இது திட்டமிட்ட சதி என்று ஆதாரபூர்வமாக தேர்வுக் குழுவிடம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்தே ராஜபக்ஸவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment