தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் தொடாந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் இவர் மீது பிஸ்ரல்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆயுத குழு ஒன்று கடுமையாக தாக்குதல் நடாத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து அவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றபட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்..

தமக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் எவரும் இருந்தது இல்லை என கூறும் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சுரேஸ் பிரேமசந்திரனின் பிரத்தியேக செயலாளராக செயலாற்றுவதால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் குடாநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் நோக்குடன் தம்மை ஆயுத தாரிகள் இலக்கு வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இவர் தாக்குதலுக்குள்ளான போது மக்கள் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர.எல்.எவ் அமைப்பின் தலைவராக இருந்தவர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் வரதர் குழு எனவும் சுரேஸ் குழுவினர் எனவும் இரண்டாக பிரிந்து சென்றது. பின்னர் சுரேஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்திருந்தனர்.
சுரேஸ் பிரேமசந்திரன் குழுவினர் இந்திய இராணுவத்தினரின் காலத்தில் மண்டையன் குழு என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது மிகவும் பாராதூரமான வன்முறைகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் தொடரும் நிலையில் சுரேஸ் பிரேமசந்திரனின் பிரத்தியேக செயலாளர் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









0 comments:
Post a Comment