உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் முழுமுதற் கடவுளாக வணங்கப்பட்ட பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் இறுதி யாத்திரை இன்று இடம்பெறுகின்றது.
சத்ய சாயி பாபாவின் உடல் இன்று காலை 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது...
பாபாவின் அறக்கட்டளை நிர்வாகிகளின் தலைமையில் இடம்பெறவுள்ள இறுதிச்சடங்கு முழு அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியிலிருந்து சற்று முன்னர் எமது விசேட செய்தியாளர் வழங்கிய ஒலிப்பதிவைக் கேளுங்கள்...
இறுதிச் சடங்கின் போது அதி முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாபாவின் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி பிரமாண்ட அகலத் திரை தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்ட்டுக் கொண்டிருக்கின்றது.

வழமையாக சாயி பாபா பக்தர்களுக்கு நல்லாசி வழங்கும் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாயி குல்வந்த் என்ற இடத்தில் சுமார் 9 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

அடக்கம் செய்யப்பட்ட பின்னர் 21 நாட்கள் முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு பாபாவின் நினைவாலயம் அதே இடத்தில் அமைக்கப்படும்.
பாபாவின் பக்தர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுவதை காணக்கூடியதாக உள்ளது.

0 comments:
Post a Comment