Premium WordPress Themes

Saturday, 30 April 2011

கார்த்திக்கு இன்று நிச்சயதார்த்தம் முடிந்தது! ஜுலை 3 ஆம் திகதி திருமணம்

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும், பருத்திவீரன் படத்தின் நாயகனுமான கார்த்தி, ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிளாம்பாடி கிராமம் குமாரசாமி கவுண்டம் பாளையத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி, ஜோதி மீனாட்சி ஆகியோரது மகள் ரஞ்சனியை திருமணம் செய்து கொள்கிறார். 

திருமணத்திற்கான நிச்சயதார்த்த விழா கிளாம்பாடி கிராமத்தில் உள்ள மகள் வீட்டில் நடைபெற்றது. 

இதில் மணமகனின் தந்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது சகோதாரி பிருந்தா, பிருந்தாவின் கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா உள்பட உறவினர்கள் பங்கேற்றனர். 



இதையடுத்து மணமகள் ரஞ்சனியின் சகோதரர் ராம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மணமகன் கார்த்தி மற்றும் உறவினர்களை வரவேற்றனர். பின்னர் அங்குள்ள வினாயகர் கோவிலில் நடிகர் சிவகுமார், சூர்யா ஆகியோர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். 

அதைத் தொடர்ந்து மணமகள் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மணமகள் ரஞ்சனியின் தந்தை சின்னசாமி, மனைவி ஜோதி ஆகியோர் மீனாட்சி சிவகுமார் குடும்பத்தினருக்கு பூங் கொத்து கொடுத்து வர வேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர். 

சிவ குமாரின் உறவினர்கள் தேங்காய் பழம் மற்றும் பூ நிறைந்த தட்டுகளை எடுத்து சென்றனர். பின்னர் இந்து முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

மணமகள் ரஞ்சனிக்கு கார்த்தியின் சகோதாரி பிருந்தா உள்பட உறவினர்கள் நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வாதம் செய்தனர். 

மணப்பெண் ரஞ்சனிக்கு கார்த்தி குடும்பத்தினர் நெக்லஸ் அணிவித்தனர். அதன்பின்னர் மணமகள் ரஞ்சனியும், நடிகர் கார்த்தியும் அருகருகே அமர வைக்கப்பட்டனர். அதன்பின்னர் அனை வருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. இதில் சிவகுமார் குடும்பத்தினர் மற்றும் மணமகளின் உறவினர்கள் ஒரே பந்தியில் அமர்ந்து சாப்பிட்டனர். 

திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டபடி வருகிற ஜூலை 3-ந்தேதி கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது. 

மணப்பெண் ரஞ்சனியின் வீட்டு முன்பாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். நடிகை ஜோதிகா எங்கே? என்று ரசிகர்கள் சூர்யாவை பார்த்து கேட்டனர். ஆனால் அவர் சிரித்தவாறு அங்கிருந்து சென்று விட்டார்

0 comments:

Post a Comment