ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார்.
இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தில் உள்ள மருத்துவமனையொன்றில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 85 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காலமானார்.
இவருக்கு உலகெங்கும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர் கடந்த மார்ச் மாதம் 28 -ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை.
இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் போது மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இவரது உடல் நிலை குறித்து சாயி மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தார்.
அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.

பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாயி மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் இலட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
ஆந்திர முதல்வர்,அமைச்சர்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி செய்தி கேட்டு புட்ட பர்த்தியில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மரணத்தின் தொடர்ச்சியாக புட்டபர்த்தியில் கடும் பதற்றம் நிலவுகின்றது.
ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
சத்ய சாயி பாபா செய்த சமூக சேவைகள் தொடர்பான விபரங்கள் வருமாறு,
சத்ய சாயிபாபாவுக்கு ஏறத்தாழ 1200 சத்ய சாயி அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது. சத்திய சாயி பாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை நிறுவனங்கள் எனப பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம் (Sociocare), விழுக்கல்வி (Educare), விழுமிய மருத்துவம் (Medicare) விழுமிய குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அவரது நிறுவனம் உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. இவரது நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
சத்திய சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.
இறந்த செய்தி கேட்டவுடன் பக்தர் ஒருவரின் அதிர்ச்சி அதிர்வலைகளை கீழே உள்ள படத்தில் காணுகின்றீர்கள்..

Medicare - எனப்படும் விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாகச் சத்திய சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.
Aquacare எனும் தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுதீககரீக்கப்பட்ட குடிநீரை சத்திய சாயி மத்திய அறக்கட்டளை வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர் பிரச்னை சுதந்திர காலத்த்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாதது.
இதனை சத்திய சாயி பாபா சாதனை காலத்தில் அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல கூடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். சென்னை மக்களின் தாகத்தை தீர்கக தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கை திட்டத்தினை சீர் செய்து சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வழங்கியது சத்திய சாயி மத்திய அறக்கட்டளை.
அது தவிர, மக்களின் மனங்களில் இவ்வாறான மேலான சேவை அல்லது தொண்டு எண்ணங்களை வளர்ப்பதற்காக அவரின் நிறுவனங்கள் பல ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.
அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, நகர சங்கீர்த்தனம்,மதங்களின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஆன்மீக வாசகர் வட்டம் என்கின்ற ஆய்வுவட்டம் போன்ற பல திருச்செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன.
உலகெங்கிலும் உள்ள சாயி நிறுவனத்தினர், தங்கள் பகுதிகளில் நிகழும் இயற்கைப் பேரிடர் சமயங்களில் உதவிகளைச் செய்துள்ளனர். இவ்வாறான பல சமூக சேவைகளைச் செய்த பெருந்தகையின் மரணத் துயரைத் தாங்காது பக்த கோடிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.

0 comments:
Post a Comment