Premium WordPress Themes

Tuesday, 26 April 2011

இன்று இரவு போர்க் குற்ற ஆவணங்கள் வெளியிடப்படும்! சனல் 4 தொலைக்காட்சி

லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சி சேவை இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக வெளியுலகுக்கு வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றி வருகின்றது. 

அதேவகையில், இன்று இலண்டன் நேரம் இரவு 7 மணிக்கு இலங்கையில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்த உள்ளதாக சனல் 4 இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் பல மனித உரிமை தொடர்பான ஆவணங்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக நிபுணர்குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியாகியுள்ள நிலையில் இன்று இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment