Premium WordPress Themes

Tuesday, 5 April 2011

மருமகனின் கத்தி வெட்டிற்கு இலக்கான மாமியார்,கிளிநொச்சியில் சம்பவம்.

கர்ப்பிணி மனைவியை கத்தியால் வெட்டி காயப்படுத்தியபோது அதனை தடுக்கச்சென்ற மாமியை மருமகன் வெட்டிப்படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இடம்பெற்றுள்ளது. 
இச்சம்பவம் நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி பள்ளிக்குடாவில் இடம்பெற்றுள்ளது. 45 வயதமான யோகராசா கலா என்பவரோ உயிரிழந்துள்ளார்.

மருமகனின் கத்தி வெட்டிற்கு இலக்கான மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மனைவி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கிளினிக்கிற்கு செல்ல முற்பட்ட கர்ப்பிணியான 22 வயதுடைய காந்தரூபன் நதியா என்ற தனது மனைவியை வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். இதனை கண்ணுற்ற குறித்த பெண்ணின் தாயார் இதனைத் தடுக்க முற்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற பிரஸ்தாப சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மருமகன் மாமியாரை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று பிற்பகல் சாவகச்சேரி பதில் நீதவான் சடலத்தினைச் சென்று பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார். 

இதேவேளை பிரஸ்தாப சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment