Premium WordPress Themes

Tuesday, 5 April 2011

10000 பேருக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை பிரதியமைச்சர் முரளிதரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதிகளில் காணி உறுதிப்பத்திரம் அற்ற நிலையில் உள்ள சுமார் 170 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை அலறிமாளிகையில் வைத்து காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டன. 

கிழக்கு மாகாணத்தில் தங்களுக்குரிய காணியிருந்தும் அதற்குரிய உறுதிகள் அற்ற நிலையில் உள்ளவர்களுக்கு காணியுறுதி வழங்கும் செயற்பாட்டை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்தவேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மேற்கொண்டு வருகின்றார். 

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் காணியுறுதி அற்ற நிலையில் உள்ளவர்களுக்கு இனபேதம் இன்றி அனைவருக்கும் உறுதியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 

இதன்படி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதிகளில் உள்ள 170 குடும்பங்களுக்கு இந்த உறுதி அலறி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் கரங்களினால் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இதுவரை சுமார் காணியுறுதியற்ற நிலையில் இருந்த 600பேருக்கு இந்த உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், கிழக்கு மாகாணத்தில் காணியுறுதி அற்ற நிலையில் உள்ள சுமார் 10000 பேருக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment