ஒசாமா பென்லாடன் கொல்லப்பட்டது 'உலகத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைவரின் வெற்றியாகும்' என்று பிரான்சின் பிரதமர் François Fillon தெரிவித்துள்ளார். உலகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான ஜன நாயகத்தின் வெற்றி" என பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் Alain Juppé தெரிவித்துள்ளார். "அமைதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இது உலக சுழற்சியின் திருப்பம். உலகம் அரபிய, முஸ்லிம்ம் மக்கள் மீது கொண்டுள்ள அபிப்பிராயத்தை மாற்ற பென்லாடன் கொல்லப்பட்டது வழிவகுக்கும். சர்வதேசத்தின் பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான கொள்ளைகளை மாற்ற இது உதவும்" என பரிசின் பள்ளிவாசல் பேச்சாளர் Dalil Boubakeur தெரிவித்துள்ளார். மேலும் பல உலகத் தலைவர்கள் எல்லாம் தமது மகிழ்ச்சியையும் பென்லாடனுக்குப் பிறகான உலக ஒழுங்கின் மாற்றங்கள் பற்றியும் கருத்துத் தெரிவித்துள்ளன்ர். இப்படியாக உலகமே ஒரு புதிய ஒழுங்கினுள் வரமுயல வழிவகுத்த பென்லாடன் கொலையானது நடந்தது எப்படி? பென்லாடனை அமெரிக்கா நெருங்கியது எப்படி?
புலனாய்வு
குவான்டனாமோ சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் தகவலின் படி அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒசாமா பென்லாடனின் விசுவாசமிக்க ஒரு தொடர்பாளர் நான்கு வருடங்களாக அமெரிக்க வெளியகப் புலனாய்வுத் துறையினரால் (CIA) கண்காணிக்கப்பட்டு வந்தார். இவரது போக்குவரத்துக்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. இவர் பென்லாடனோடு தொடர்புள்ளவர் அல்லது அவரது பாதுகாப்பின் கீழுள்ளவர் என்பதையும் கைதியிடமிருந்து விசாரித்தறிந்திருந்தனர். இவரைக் கண்காணித்ததில் இவர் இஸ்லாமாபாத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரப் பயணத் தூரத்தில் தனது சகோதரனுடனும் குடும்பத்தினருடனும் வழமைக்கு மாறான பெரும் வசதிகள் கொண்ட மாளிகையில் கோட்டை போன்றதொரு பாதுகாப்புடனும் வாழ்ந்து வந்தது அமெரிக்க உளவுத்துறையின் கண்களை உறுத்தியது.
இந்த மாதிரி மாளிகை மிகத் தனித்துவமாக இருந்தது. அந்தப் பிராந்தியத்திலேயே அப்படி ஒரு கட்டடம் இருக்கவில்லை. இந்தக் கட்டம் 5மீற்றர் உயரம் கொண்ட பாதுகாப்பு மதில்களையும் இரு வலுவாகப் பாதுகாக்கப்பட்ட இரு கதவுகளையும் உடையது. இக்கட்டத்திற்கு எந்தவிதமான தொலைத் தொடர்புகளோ அல்லது இணையத் தொடர்புகளோ வழங்கப்பட்டிருக்கப் படவில்லை. தரைத் தாக்குதலை இலகுவாக முறியடிக்கக் கூடிய வயையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படடிருந்தன. இந்த மாளிகை அந்தக் கிராம பெரிய வீடுகளிலும் பார்க்கக் கிட்டத்தட்ட 8 மடங்கு பெரியது. இந்தச் சந்தேகத்தில் வருடக்கணக்கில் புலனாய்வு செய்த அமெரிக்கா அந்தக் கடட்டிடத்தினுள் தீவிரவாத நடவடிக்கைகள் நடப்பதாக உறுதி செய்தது. மேலும் இந்தப் பாதுகாப்பின் கீழ் ஒசாமா பின் லேடன் இருக்கக் கூடும் என்றும் முடிவெடுத்தனர். இந்த முடிவுகளின் பின்னர் தீவிர தயார்ப்படுத்தல்கள், ஆலோசனைகள், தாக்குதல் திட்டங்கள் முடிவாகிய பின்னர் சென்ற வாரம் அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியைத் தாக்குதலுக்கு வழங்கினார்.
தாக்குதல்

இத்தாக்குதல் மே 1ம் திகதி நந்ளிரவிற்கும் 2ம் திகதி அதிகாலைக்கும் இடையில் கடற்படையினரின் நவீன இரகசிய உலங்குவானூர்தி மூலம் கொமோண்டக்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டது. மூவூடகப் படையணியினாரான அதிசிறப்பு வாய்ந்த அமெரிக்காவின் அதிஉயர் இரகசிய தாக்குதல்களை நடாத்திய Navy Seals - TeamSIx ஈடுபட்டதாக CBS NEWS உறுதிப்படுத்தியது. இந்த நடவடிக்கையை CIA இயக்குநர் Leon Panetta நேரடியாக வழிநடாத்தியிருந்தார்.
கொமோண்டோக்கள் பென்லாடன் இருந்த கட்டிடத்தினை சுற்றிவளைத்திருக்க மேலே கட்டிடத்திற்கு மேலே தரிப்பு நிலையில் நவீன உருமறைப்புக் கொண்ட கதிரிகளுக்கு அகப்படாத 3 உலங்குவானூர்திகள் பறந்து கொண்டிருந்தன. அயலவர்களில் ஒருவரின் சாட்சியத்தின்படி மேலேயும் கீழேயும் சுற்றிவளைப்பு ஆரம்பித்த வேளையில் கீழிருந்து உலங்குவானூர்திகள் மீது பலத்த தாக்குதல் தொடங்கியது. அந்தத் தாக்குதலிலேயே ஒரு உலங்குவானூர்தி சேதமாகி விழுந்தது. இந்தத் தாக்குதல் இரு பகுதியிலுமே 40 நிமிடங்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டது எனக் கூறியுள்ளார். அமரிக்கத்தகவல்கள் CBS NEWS போன்றவை இத்தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியிருந்தனர். இதில் அமெரிக்ப் புலனாய்வுத் துறையினர் பின் தொடர்ந்த அந்ததக் தகவலாளரும் பென்லாடனின் மனைவியொருவரும் அவரின் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டதாக அறிவித்தனர். பராக் ஒபாமா அறிவிக்கையில் தாக்குதலில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு அவரது உடலம் கைபப்பற்றப் பட்டதாக அறிவித்திருந்தார்.
பென்லடனுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?
பென்லாடன் உடலத்திற்கு என்ன நிழந்தது?
அங்கிருந்த மிகுதிப்பேருக்கு நடந்தது என்ன?
TEAM SIX எப்படியான படையணி?
மேலும் பல வெளிவராத தகவல்கள் எதிர்பாருங்கள் நாளை இரண்டாம் பகுதியில்!!!









0 comments:
Post a Comment