Premium WordPress Themes

Friday, 6 May 2011

தூங்கும்போது பால் குடித்தால் பருமன் அதிகரிக்கும்! தாய்மார்களின் கவனத்துக்கு

தூங்கும் நேரத்தில் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பது அவர்களது உடல் மேலதிக பருமன் அடையக் காரணமாகின்றது என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

குழந்தைப் பருவத்திலும் சிறு வயதிலும் தூங்கச் செல்லும் நேரத்தில் பால் அருந்தும் பிள்ளைகளின் உடல் ஏனைய பிள்ளைகளின் உடலை விட பருமன் அடைகின்றது. 

இரண்டு வயதாக இருக்கின்றபோது ஒரு பிள்ளை உறங்கச் செல்லுமுன் ஒரு போத்தல் பால் குடித்தால், அந்தப் பிள்ளை ஐந்தரை வயதாகின்ற போது, ஏனைய பிள்ளைகளிலும் பார்க்க அதன் உடல் பருமன் 30 வீதம் அதிகரிக்கின்றது. 

ஒரு குழந்தை தினம் உணவை உட்கொள்ளும் பருவத்துக்கு வந்த பின்னரும் தொடர்ந்து அதற்கு திண்ம உணவோடு சேர்த்து பாலும் அருந்தக் கொடுப்பதால் அந்த பிள்ளைக்கு பெற்றோர் மிகை உணவையே வழங்கிவருகின்றனர் என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். 



முழு அளவான கொழுப்பு கொண்ட எட்டு அவுண்ஸ் அளவு கொண்ட ஒரு போத்தல் பால் 150 கலோரிகளைக் கொண்டது. இது ஒரு வயதுக்கும் இரண்டு வயதுக்கும் இடைப்பட்ட ஒரு பிள்ளைக்கு தினசரி தேவைப்படும் சக்தியில் 12 வீதமாகும். 

ஆறுமாதம் தொடக்கம் ஒரு பிள்ளைக்கு தாய்ப்பாலோ அல்லது புட்டிப்பாலோ கொடுப்பது படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தாய்மாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

அநேகமான தாய்மார் தமது பிள்ளைகளுக்கு அவர்கள் திண்ம உணவை உட்கொள்ள ஆரம்பித்தப் பின்னரும் இரவில் தூங்கச் செல்லும்போது ஏதோ ஒரு வகைப் பாலைக் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

அமெரிக்க விஞ்ஞானிகள் 7000 பிள்ளைகளை வித்தியாசமான கால இடைவெளிகளில் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர்

0 comments:

Post a Comment