Premium WordPress Themes

Wednesday, 4 May 2011

19 கொலை, கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புள்ள காமகொடூரனை பிடிக்க அதிரடி வேட்டை!

19 கொலை, கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புள்ள எடப்பாடி சங்கரை பற்றிய தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அறிவுச்செல்வம் கூறினார். 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் உள்ளது கோனசமுத்திரம் பனங்காடு. இந்த ஊரை சேர்ந்தவர் சங்கர் என்கிற ஜெய்சங்கர் (வயது 33). இவர் மீது மேற்கு மண்டலத்தில் மட்டும் 19 வழக்குகள் உள்ளது.

கொலை , கற்பழிப்பு வழக்குகளும் இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இவர் கொலை , கற்பழிப்பில் ஈடுபட்டு வருகிறார். கர்நாடக மாநிலத்திலும் இவர் மீது வழக்குகள் உள்ளது. 

இவரை போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது 18.3.2011 அன்று தப்பி ஓடிவிட்டார். இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

சங்கரைப்பற்றி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அறிவுச்செல்வம் கூறியதாவது:- 

தப்பி ஓடிய சங்கரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சங்கரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம். 

சங்கரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே 98408-55903, 94432-59900, 0427-2272929, 0427-2273838, 04283-222263, 94432-60308 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம். பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இதன் பின்னர் அவர் சங்கரின் புகைப்படத்தையும் வெளியிட்டார். இதை ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஓட்ட அவர் உத்தரவிட்டார். பேட்டியின் போது தனிப்பிரிவு ஆய்வாளர் பாஸ்கர் உடன் இருந்தார்.

0 comments:

Post a Comment