இது ஒரு புது வகையான பிரா. இதன் விஷேட அம்சம் என்னவென்றால் ஷேர்ட், டிரவுஸர், ஸ்கேர்ட் என்பனவற்றில் வைக்கப்பட்டிருப்பது போல் இதற்குள்ளும் மறைவாக ஒரு பொக்கற் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய வகையான பொருள்களை மறைத்து வைத்துக் கொள்ளலாம் குறிப்பாக கையடக்கத் தொலைபேசிகளை கச்சிதமாகவும் பத்திரமாகவும் வைத்திருக்க இது மிகச் சிறந்த இடம் என்று இதை உருவாக்கியுள்ள 14 வயதான இஸய்யா மேர்பி என்ற மாணவி தெரிவித்துள்ளார்.
இவர் படிக்கும் வெஸ்ட்லோன் பாடசாலையைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவிகள் இவருக்கு இந்த பிராவை உருவாக்குவதில் உதவியுள்ளார்கள்.

தேசிய ரீதியாக இந்த பிராவை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுள் 90 வீதமானவர்கள் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
மாணவிகள் ஏதோ விளையாட்டாக சிந்தித்து உருவாக்கிய இந்த பிரா இப்போது வர்த்தக ரீதியான வரவேற்பைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக இந்த மாணவிகளின் விஞ்ஞான ஆசிரியை தெரிவித்துள்ளார்.









0 comments:
Post a Comment