ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை தவறானது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று நிராகரித்துள்ளார். போர்முனையில் நடந்தது எனக்கு மட்டுமே தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். கிழக்குப் பகுதிக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், நேற்றுக் காலை வெலிகந்த படைத்தளத்தில் சுமார் 2 ஆயிரம் படையினர் மத்தியில் உரையாற்றினார்.
அங்கு கருத்து வெளியிட்டுள்ள இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மேலும் கூறியதாவது, ஐ.நாவின் அறிக்கையை நான் முழுமையாக வாசித்துள்ளேன். அது முற்றிலும் பக்கச்சார்பாகவே தொகுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நன்மதிப்பைக் குறைக்கும் வகையிலான தவறான தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் வன்னிக் களமுனை நடவடிக்கைகளுக்குத் தளபதியாக இருந்த எனக்கு அங்கு என்ன நடந்தது என்பது நன்றாகத் தெரியும். இந்த அறிக்கை நாட்டினதும், அதிபரினதும், பாதுகாப்புச் செயலரின தும் மதிப்பை குன்றச்செய்யும் வகையில் அமைந்துள்ளது. சில குழுக்களும் தனிநபர்களும் கொடுத்துள்ள தகவல்களின் அடிப் படையிலேயே தருஸ்மன் அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவை ஆதாரமற்றவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.









0 comments:
Post a Comment