திருக்கோணமலை ஏ-15 வீதியின் 4ஆவது மை கல் பகுதியில் இன்று காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காட்டுப் புலி ஒன்று இன்று பிரதேச வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.குறித்த பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த காட்டுப் புலியின் உடலை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர். பெருமளவான மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து காடுப்புலியினை பார்த்துச் சென்றனர்.












0 comments:
Post a Comment