Premium WordPress Themes

Friday, 6 May 2011

ஒசமா பின்லேடன் மீதான விசேட தாக்குதலில் பங்கேற்ற துணிச்சலான நாய்!(பட இணைப்பு)

அமெரிக்க கடற்படையின் விஷேட அதிரடிப்பிரிவான மெரைய்ன்சீல்ஸ் பிரிவினர் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பின்லாடனின் மறைவிடத்தின் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றமை குறித்து அமெரிக்கா பெருமிதத்தில் உள்ளது. 

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட படை வீரர்களுள் ஒருவர் நியுயோர்க் டைம்ஸ் மற்றும் பிரிட்டனின் சன் பத்திரிகை ஆகியனவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இது மனிதன் அல்ல இராணுவத்தில் பயன்படுத்தப்படும் நாய். இந்த நாய் படை வீரர் ஒருவருடன் சேர்த்துப் பிணைக்கப்பட்டுள்ளது. 



அந்தத் தாக்குதல் வீரர் ஹெலிகொப்டரில் இருந்து இறங்கும் போது அதுவும் கூடவே வருகின்றது. இந்த நாய் பற்றி எந்தக் குறிப்பையும் பென்டகன் இதுவரை வெளியிடவில்லை. 

யார் இந்த நாய்? என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வி. இதுதான் அமெரிக்காவின் துணிச்சல் மிக்க நாய் என்று அமெரிக்காவின் த டைம்ஸ் பத்திரிகை வர்ணித்துள்ளது. 

அமெரிக்க இராணுவத்தில் 2700 நாய்களைக் கொண்ட ஒரு தனிப்பிரிவு உள்ளது. அதில் அநேகமானவை ஜெர்மன் ஷெபர்ட் மற்றும் பெல்ஜிய மலிநோயிஸ் இனங்களைச் சேர்ந்தவை. எனவே பின்லாடன் தாக்குதலில் பங்கேற்ற இந்த நாயும் இந்த இனங்களுள் ஒன்றைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டும் என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

பின்லாடன் மீதான தாக்குதல் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. வெள்ளை மாளிகையும், பென்டகனும் இந்த விடயத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றன. 

ஆனாலும் இந்த நாய் குறித்த தகவல்கள் எப்படியோ கசிந்துவிட்டன. இந்த மாதிரியான தாக்குதல்களின் போது தேடுதல் நடவடிக்கைக்கு நாய்களின் பங்கு கட்டாயம் தேவைப்படும். 

எனவே நிச்சயம் ஒரு படை வீரர் நாயுடன் வந்திருக்கக் கூடும் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment