கனடாவில் நேற்று இடம்பெற்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் முதல் தமிழராகத் இடம்பிடித்துள்ளார். மீண்டும் கன்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைத்துள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சி 70 ஆசனங்களை மேலதிகமாக நாடாளுமன்றத்தில் பெற்று இரண்டாவது பெரும் கட்சியாக வந்துள்ளது தேர்தல் முடிவுகளின் படி கன்சவேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது.
பசுமைக் கட்சி 1 ஆசனத்தையும் தக்க வைத்துள்ளன. ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் 17ஆயிரத்து 200 வாக்குகளை பெற்று புதிய ஜனநாயகக் கட்சியின் வாக்கு வங்கியை மேற்படி தொகுதியில் கணிசமாக அதிகரிக்க வைத்து இத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலில் 4ஆயிரத்து 900 வாக்குக்களைப் மாத்திரமே இந்தக் கட்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதர பல தொகுதிகளிலும் புதிய ஜனநாயகக் கட்சி, கன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி ஆகியன மிக நெருக்கமான வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், நூற்றுக்கணக்கான வாக்குகளே வெற்றியை நிர்ணயித்தன.
இதேவேளை கன்சவேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட கவன் பரஞ்சோதி 11 ஆயிரத்து 39 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவாகியுள்ளது.

இதன் பிரகாரம் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக் லெய்டன் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாவது இதுவே முதற்தடவையாகும்.
கன்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைப்பது அகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களிற்கும் பாதகமாக அமையும் என்பதும் கடுமையான சட்டங்களை கொண்டுவர வழிவகுக்கும் என்பதும் கருத்தாகவுள்ளது.

லிபரல் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவரை ராதிகா போட்டியிட்ட தொகுதியில் நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றிருந்தால் தமிழர்களின் வாக்குப் பிரிந்து கன்சவேட்டிவ் கட்சியே இத் தொகுதியைக் கைப்பற்றி தமிழர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாவதை இவ்விடயத்தில் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் போன்ற அமைப்புக்களின் முயற்சி இவ்வாறான ஒரு நிலை தோன்றாமல் தவிர்த்தது.

0 comments:
Post a Comment