அல்குவைதா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின் லேடன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கப் படைகள் இன்று அறிவித்தன.
அமெரிக்கப் படைகள் இந்த அறிவிப்பை விடுத்த சிறிது நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அமெரிக்காவில் நிகழ்த்திய விஷேச உரையின் மூலம் இதை ஊர்ஜிதம் செய்தார்.
இவரது தலைக்கு 25 மில்லியன் டொலர் பரிசையும் அமெரிக்கா அறிவித்திருந்தது. ஒஸாமா கொல்லப்பட்ட செய்தி பரவியதும் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு எதிரே பெருந்திரளான மக்கள் கூடி வெற்றிக் களிப்பில் கோஷமிட்டனர்.
பின்லேடனின் மறைவிடம் பற்றி புலனாய்வுத் தகவல்கள் ஊர்ஜிதமானதும், இவரை இலக்காக வைத்து “பின்லேடனை அழிப்போம்” என்ற விஷேட இராணுவ நடவடிக்கைக்கு கடந்த வாரம் ஒபாமா அனுமதியளித்திருந்தார்.
அதன்படி மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட இராணுவக் குழு இந்தப் பணியில் ஈடுபட்டது. இந்தக் குழுவே பின்லாடனின் கதையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

0 comments:
Post a Comment