அல்கைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் அமெரிக்க சிறப்பு படையணியின் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுளளது.
பின்லாடனின் மரணம் எமது நடவடிக்கையை பாதிக்காது, நாம் அமெரிக்காவிற்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக தொடர்ந்து போராடுவோம். பாகிஸ்தான் மக்கள் அந்த நாட்டுக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும் என அல்கைடா அமைப்பு இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பின்லாடன் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா ஒன்றை தாம் வெளியிடவுள்ளதாகவும், அமெரிக்கர்களின் ஆனந்தம் நீண்டகாலம் நிலைக்காது,
அவர்களின் கண்ணீருடன் குருதியும் விரைவில் கலக்கும் எனவும் அல்கைடா அமைப்பு அதில் மேலும் தெரிவித்துள்ளது.
அதேசமயம், பாகிஸ்தானின் பல நகரங்களில் நேற்று (06) வெள்ளிக்கிழமை பின்லாடனுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளதாகவும், பின்லாடன் இஸ்லாம் மதத்தின் பாதுகாவலன் என ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் கோசங்களை எழுப்பியதாகவும் பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே,பாகிஸ்தானில் உள்ள ஒசாமா பின் லேடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவையில் இருந்து அல்கொய்தா செப்டம்பர் 11 தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு நாளன்று ரயில்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு நாளன்று அமெரிக்காவில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு இடத்தில் ரயில்களைத் தாக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அல் கொய்தா திட்டமிட்டிருந்தது என்று அமெரி்கக உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பாகிஸ்தானில் உள்ள ஒசாமாவின் வீட்டில் இருந்து கணிணி மற்றும் சில பொருட்களை அமெரி்கக்ப்படைகள் கைப்பற்றின. அதில் இருந்த தகவல்களை வைத்து தான் அல் கொய்தா ரயில்களைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலில் கூறியிருப்பதாவது,
தாக்குதல் குறித்து கிடைத்துள்ள தகவல் பொய்யாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. போக்குவரத்தை குறிவைத்து அவர்கள் இன்னும் திட்டமிடுவதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அல் கொய்தா ரயிலை தடம்புரளச் செய்து பாலத்தில் இருந்து கீழே விழவைக்கத் திட்டமிட்டிருந்தனர். தற்போதுள்ள அதி நவீன பிரேக்குகளால் ரயிலை தடம்புரளச் செய்ய முடியுமே தவிர கீழே விழவைக்க முடியாது.
அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் ரயில்வே துறையை எச்சரிக்கவிருந்தது.
இது குறித்து அமெரிக்க அதிகாரி மேத்யூ சாண்ட்லர் கூறியதாவது,
அமெரிக்க ரயில்வேத் துறை மீது தாக்குதல் நடக்கப்போவதாக எந்த தகவலும் இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் திட்டம் தீட்டப்பட்டதா என்று தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்
போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத் தலைவர் ஜான் பிஸ்டோல் கூறுகையில்,
தற்போது போக்குவரத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. நாங்கள் எப்பொழுதும் பொறுப்புடன் செயல்படுகிறோம்.
அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளனர். நாட்டின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு, பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
பின் லேடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள 5 கணிணிகள், 10 ஹார்ட் டிரைவ்கள் மற்றும் 100 ஸ்டோரேஜ் டிவைஸ்கள் ஆகியவற்றை வைத்து அல் கொய்தாவுக்கு மேலும் அடி கொடுக்கலாம் என்று நிபணர்கள் கருதுகின்றனர்.
சிஐஏ, தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, நீதித் துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களை ஆய்வு செய்யத் துவங்கிவிட்டனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வு மாதக் கணக்கிலோ அல்லது ஆண்டு கணக்கிலோ நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வில் முதலில் தற்போது ஏதாவது அச்சுறுத்தல் உள்ளதா என்றும் கண்டறியப்படவுள்ளது.









0 comments:
Post a Comment