Premium WordPress Themes

Saturday, 7 May 2011

பண பரிமாற்றத்தில் போலி ஆவணம் கனியை ஜாமினில் விட க்ககூடாது: சி.பி.ஐ.,வக்கீல் வாதம்


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் , இவர் கலைஞர் தொலைக்காட்சியின் பின்னணியில் இருந்து மூளையாக செயல்பட்டார் என்றும், இவர் கலைஞர் டி.வி., துவங்கும் நேரத்தில் ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார். இதில் இருவரது பங்கும் இருந்தது என்று இன்றைய வாதத்தின் போது சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வக்கீல் எடுத்துரைத்தார்.

அவர் மேலும் கூறுகையில்; கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட பணிகள் அனைத்தும் கனிமொழிக்கு தெரியும் . ராஜாவுடன் நெருங்கமாக இருந்ததால் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் பணம் கலைஞர் டி.வி., க்கு பரிமாற்றம் நடந்திருக்கிறது. கனிமொழியும் இந்த சதியில் பங்கு கொண்டவர் இதில் இவருக்கும் பொறுப்பு உள்ளது. இவர் கலைஞர் டி.வி.,யின் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் பண பரிமாற்றம், திரும்ப அளித்தல் உள்ளிட்டவைகளில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பணம் பரிவர்த்தனை நேர்மையாக நடந்தது என்பது நம்ப முடியாதது. எனவே கனிமொழியை ஜாமினில் விட முடியாது என்றார். பாவ்லா , கோயங்காவுக்கும் இதில் பங்கு உண்டு இவ்வாறு சி.பி.ஐ.,வக்கீல் கூறினார்.நேற்று ஆஜராகி வாதாடிய பிரபல வக்கீல் ஜெத்மலானி வாதிடுகையில் இதற்கு நேர்மாறாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment