முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர்.
இவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதாகவும் இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார்.
ஆனால் நடந்தது வேறு அவரையும் புலித்தேவனையும் கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலைசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.

முதலில் ப.நடேசன் அவர்களின் மனைவி கொலைசெய்யப்பட்டதாகவும், பின்னர் கடும் சித்திரவதைகளின் பின்னர் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பால் சுட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களை இராணுவம் கட்டிவைத்து கொடுமைசெய்ததற்கான காயங்கள் அவர் உடலில் காணப்படுகிறன.
இந்தக் கொடூரங்களைப் புரிந்த இராணுவத்தினரே இப்படங்களையும் எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
எங்களுக்கு கிடைக்கப் பெற்ற புதிய போர்க்குற்ற ஆதாரப் புகைப் படம் ஒன்றையும் இங்கே வெளியிடுகிறோம்..
இவர் நச்சு வாயுக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் அவரது உடல் முழுவதும் காணப்படுகின்றது. இவர் ரட்ணம் மாஸ்ரராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இப்படியாக அதுவும் சர்வதேசக் கண்காணிப்பில் சரணடைபவர்களைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்வதென்பது உலகிலேயே சிறிலங்கா இராணுவம் தான் முதன் முதலில் செய்துள்ளது.

0 comments:
Post a Comment