விறகு தேடிக் காட்டுக்குச் சென்ற வேளையில் இராணுவச் சிப்பாயொருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 16 வயது யுவதியொருத்தி மூன்றுமாத கர்ப்பிணியாக இருக்கும் நிகழ்வு வாகரையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் வாகரைப் பிரதேசத்தின் பதினாறு வயது யுவதியொருத்தி விறகு தேடிக்காட்டுக்குச் சென்ற வேளை இராணுவச் சிப்பாயொருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆயினும் சம்பவம் பற்றி வெளியில் சொன்னால் இராணுவத்தினர் தன்னைக் கொன்று விடுவர் என்ற பயம் காரணமாக அவர் விடயத்தை மறைத்து வைக்க முயன்றுள்ளார். ஆயினும் இன்று அவரது கர்ப்பம் குறித்து வெளியில் தெரிய வந்த பின்பே அவர் விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னை வல்லுறவுக்குட்படுத்திய சிப்பாயை மீண்டும் ஒரு தடவை கண்டால் தன்னால் தெளிவாக அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் பொலிசாருக்கு அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பிரஸ்தாப இராணுவச்சிப்பாயை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை வாகரைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.










0 comments:
Post a Comment