Premium WordPress Themes

Wednesday, 26 October 2011

ஏழாம் அறிவு விமர்சனம்..


படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்... ஏழாம் அறிவு படத்தில்... பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்... கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல...வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!
படத்திற்கு வருவோம்... தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.

பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்... ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்... இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.
கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா).
அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர்.
போதிதர்மர் சீனா சென்றிருந்த நேரம், சீனா பயங்கரமான தொற்று வியாதியால் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து சீன மக்களை காப்பாற்றுகிறது போதிதர்மரின் மருத்துவம்.

இதனால் அப்பகுதி மக்களால் தெய்வமாகவே வணங்கப்படுகிறார் போதிதர்மர். அப்பகுதி மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் போதும் தன் வர்மக் கலைகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார்.
சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீன மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். கலை, மருத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் போதிதர்மர்.
அவர் மீண்டும் தன் தமிழகம் திரும்ப விருப்பப்பட்ட போதும், போதிதர்மரின் உயிர் சீன மண்ணில் பிரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பியதால் அவர்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உண்டு அங்கேயே தன் உயிரை விடுகிறார் போதிதர்மர்.
பையோ வார் ( உயிர் போர் ) பற்றிய விஷயங்களை நம் தமிழ்படமான ‘ஈ’ படத்தில் பார்த்திருப்போம். ஏழாம் அறிவு படத்தில் இந்தியாவை தாக்க சீனா ரெட் என்கிற பையோ வார் பிளானில் இறங்குகிறது.
அதன் தொடக்கமாக சீனாவை சேர்ந்த டோங்லி ( படத்தின் வில்லன் ) என்றவன் தமிழ்நாட்டுக்கு வருகிறான். அரவிந்த் ( சூர்யா ) சென்னையில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் கம்பனியில் வேலைபார்க்கும் சர்க்கஸ் கலைஞர்.
சர வெடியாக வெடிக்க இருந்த ‘ரிங்க ரிங்கா’ பாட்டு ஊசி வெடியாக மாறிவிட்டாலும்... அதில் சூர்யாவின் சாகசங்களும், அதைவிட மற்ற சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களும் பலே! ரெட் ஆபரேஷனை தமிழகத்தில் தொடங்க டோங்லி வந்துவிடுகிறான்.
வந்ததும் அவனது முதல் வேலை, சுபாவை (ஸ்ருதிஹாசன்) கொலை செய்வதுதான். ஏன்? மறபியல் பொறியாளராக சுபா (ஸ்ருதிஹாசன்). பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர் போதிதர்மர்.
இப்போது உலகில் பல விளங்க முடியாத நோய்கள் வர தொடங்கிவிட்டது. போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து ஆராய்ச்சி செய்து, அதே விதமான டி.என்.ஏ-வை போதிதர்மரின் பரம்பரையில் யாருக்காவது இருக்கும்.
போதிதர்மரின் டி.என்.ஏ.வை இவருக்கு பொருத்தினால், போதிதர்மரின் கலை, மருத்துவ அறிவு மீண்டும் உலகத்துக்கு கிடைக்கும் என்பது தான் சுபாவின் ஆராய்ச்சி.

(இந்த டி.என்.ஏ மேட்டர் Assassin's Creed என்ற ஆங்கில படத்தில் இருந்து உருவப்பட்டதாகவே சொல்லப்படுகிறது...) சுபாவின் ஆராய்ச்சி விஷயங்களை காசு வாங்கிக்கொண்டு சீனாவுக்கு தெரியப்படுத்துபவர் சுபாவின் பேராசிரியர் ரங்கராஜன்... இந்த சகுனி வேலையால் தான் வில்லன் டோங்லி தமிழ்நாட்டுக்கு வந்து புது வைரஸ் கிரிமியை பரப்பியதோடு... சுபாவை கொல்ல முயர்ச்சி செய்கிறான்.
போதிதர்மர் பரம்பரையில் வந்தவர் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் அரவிந்த். அரவிந்தை வைத்து அவருக்கும் தெரியாமலே ஆராய்ச்சியை தொடர்கிறார் சுபா.
சுபாவின் பழக்கத்தை காதலாக எடுத்துக்கொண்டு, அது இல்லை என்ற பின் ரெயில்வே ட்ராக்கில் யம்மா யம்மா சோகப்பாட்டுப் பாடி பின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தெரிந்து சுபாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அரவிந்த்.
போதிதர்மரின் திறமைகள் திருப்பவர... விளைவுகளை சந்திக்கிறான் வில்லன் டோங்லி! படத்தின் முதல் பாதியில் பல பிரம்மாண்ட காட்சிகளோடு, நாம் அறியாத பல தகவல்களை சொன்னாலும்... பார்வையாளனுக்கும் படத்துக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இல்லாமலே போய்விடுகிறது.
முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க உழைத்தவர்களுக்கு சபாஷ்! போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம். சூர்யாவின் வர்மக்கலை வித்தைகளும் ஹீரோயிஸம் கலந்ததாகவே பிரம்மிப்பூட்டியது.
ஆனால் முதல் பாதியில் சூர்யாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிற ரொமான்ஸ் காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்து பழைய ஸ்டைல். அந்த யானை சவாரி ரொமான்ஸ் காட்சி புதுசு.
காதல் தோல்வி என்று யம்மா யம்மா பாடலில் சூர்யா உருகி உருகி பாடுகிற அளவுக்கு அதற்கு முன்பு இருந்த காதல் காட்சிகள் உருக்கமானதாக அமையவில்லை என்பதே உண்மை.
முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் ( நோக்கு வர்மம் - எதிரில் இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது ) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன்.
ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.
இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை... வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.
தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது.
வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார்.
வில்லன் நடிகர் ஜானி ட்ரி, பார்வையில் மிரட்டுகிறார். க்ளைமக்ஸ் காட்சியில் தான், நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார்.
அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது. ரவி கே.சந்திரனின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் இயக்குனர் சொன்ன சொல் கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
இன்னும் என்ன தோழா... பாடலை வீணடிப்பார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். நல்லவேளை படத்தின் பின்புலத்தில் வைத்து மகிழ்ச்சி.
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் முன்னந்தி சாரல்..., யம்மா யம்மா..., அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். ஓரிரு பாடல்கள் அவர் படத்தின் பாடல்களை அவரே ரீமிக்ஸ் செய்தது போல ஒரு உணர்வு.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், கருத்துக்களை கமர்ஷியல் கலவையோடு சொல்வது போலவே இருக்கும். இதில் கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை.
இந்தக் கூட்டணியில் இன்னொரு கஜினியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே! எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை சொன்னால் அவர் சொன்னதை வைத்து எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் கீழே தான்!

வேலாயுதம் விமர்சனம்

இந்திய சினிமா வரலாற்றில்,தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் ஜெயம் ராஜா,விஜய், மற்றும் தெலுங்கு சினிமா வரலாற்றில் கூட இந்த மாதிரி ஒரு படம் வந்தது கிடையாது.அதற்கு உதாரணம் தான் இந்த படம். ராஜா கோடு மேல கோடு போட வச்சிருந்த பென்சில் உடைஞ்சி காணாமப் போயிருச்சாம். அதனால முதல் தடவையா சொந்தமா யோசித்து படம் எடுக்கிறாராம்.

ஜெனிலியா ரொம்ப புத்திசாலி (விஜய் கிட்ட இருக்கும் போது மட்டும் முட்டாள்) பத்திரிக்கை நிருபரா வேலை செய்கிறார்.பசுபதி அந்த ஊர்ல தாதா.ஆனா பகவத் கீதை பாக்குற எல்லோருக்கும் உபதேசம் பண்ணுவார். அவரோட உண்மையான முகம் ஜெனிலியாவுக்கு மட்டும் தான் தெரியும்.(பின்ன ஒரிஜினல் படத்துலையும் கதை அப்படித்தான் போகுது). அப்படியிருக்கும் போது ஒரு வெடிகுண்டு விபத்துல பசுபதியின் ஆட்கள் சாக அதை வைச்சது வேலாயுதம் தான் என்று துண்டுச்சீட்டுகள் மூலம் வதந்தி பரப்புகிறார்.

அப்படியே கட் பண்றோம்.இது எதுவும் தெரியாம அத்தைப் பொண்ணு,அம்மா என்று சந்தோஷமாக ஆடல் பாடல் ஊரே மதிக்கும் ஒருவராக கிராமத்தில் வாழ்கிறார் விஜய்.(மதிக்காம மிதிச்சா கொஞ்சம் நல்லாயிருக்கும்).இப்போ விஜய் ஜெனிலியா,பசுபதி இருக்கிற ஊருக்குப் போக ஒரு காரணம்.அதுக்கு இட்டாங்கடா அந்த தங்கச்சி சரண்யாவ. தங்கை இருந்தா போதுமா.சிட்டிக்கு எப்படி போக. கல்யாணம் பண்ணுங்கடா. கல்யாண நேரத்துல எப்படிடா சிட்டிக்கு போகுறது. தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு சிட்பண்ட்ல பணம் போட்டியிருக்காரு விஜய்.அதுவும் ரவுடி இருக்கிற சட்டியில தான் அகப்பை போட முடியும்.பணத்தை எடுக்க அந்த ஊருக்கு போக.

அப்ப பாத்து ஊர்ல நிறைய இடத்துல குண்டு வெடிக்க அந்த இடத்துல எல்லாம் விஜய் ஜஸ்ட்ல மிஸ் ஆகுறார். எப்படின்னா குண்டு அவர் செருப்பு பக்கத்துல வெடிக்கும்.இங்க யார்டா பொட்டு வெடி வெடிச்சதுன்னு கேக்காம எஸ் ஆயிருவாரு. அப்ப பாத்து கோவில் அர்ச்சகர் உங்க பெயர் என்ன அப்படி கேக்க(அப்பத்தானே வேலாயுதம் பெயர் எல்லோருக்கும் தெரியும்).அதே மாதிரி விஜய் சொல்ல ஆபத்பாந்தவர் வந்துட்டார் அப்படி மக்கள் பில்டப் கொடுக்கிறாங்க.(அதே மாதிரி தான் தியேட்டர்ளையும் சொல்வாங்க). ஜெனிலியா வந்து நீங்க தான் அதுக்கு சரியான ஆள்னு சொல்ல நான் அதுக்கு சரி வர மாட்டேன்னு விஜய் சொல்ல (எதுக்குப்பா அதை சொல்வீங்களா..இல்ல வடிவேலுக்கு சொல்லாம விட்ட மாதிரி இருந்துருவீங்களா) ஜெனிலியா நீங்க தான் அதுக்கு சரியான் ஆள்னு சொல்றாங்க.

இப்படி எல்லாம் சொன்னா விஜய் கேப்பாரா. சிட்பண்ட்ல பணத்தை ஏமாத்துறாங்க. ஜெண்டிமேன், இந்தியன்,அன்னியன்,சாமுராய், ரமணா, இன்னும் வர்ற போற சங்கர் படம் மாதிரி இவரு பணம் போன உடனே பொங்குறாரு.பொங்குறாரு.லாஜிக் இடிக்குமே.சரி இப்படி வைப்போம்.பணம் போனதால மக்கள் எல்லாம் தற்கொலை செய்ய பொங்கி எழுந்து மாஸ்க்கைப் போட்டுகிறார். அழிக்கிறார்.

நடுவுல விஜய் தங்கச்சி கல்யாணம். விஜய் மேல சந்தேகம் வந்து வில்லன் குண்டு வைக்க இவர் சாகாம சரண்யா காலி. லேசா முகம் தெரிஞ்ச காரணத்துனாலத்தான் இங்கே வந்துட்டாங்க அப்படி சொல்லி ராவோடு ராவாக இன்னொரு மாஸ்க் தைக்கிறார். அப்படியே கிளம்பி எதிரிகளை அழிக்கிறார். அப்பத்தான் ஒரு உண்மை தெரியுது பசுபதி இந்து இல்ல இந்தியாவை இழிக்க (சாரி ஒரு ரைமிங் வரட்டுமே என்று சொல்லி விட்டேன்) அழிக்க வந்த முஸ்லீம் (கொய்யால இதையாவது மாத்துங்க). உடனே துவம்சம் பண்ணி இந்தியாவை காப்பாத்தி விட,ஜெனிலியா,ஹன்சிகா இருவரும் விஜய்க்காக போட்டி போட எனக்கு கோட்டி கிழிய..



இந்தியா முழுக்க ரசிகர்கள் படத்தை கொண்டாட வருங்கால பிரதமர் என்று போஸ்டர் அடித்து விடுகிறார்கள்.இது தெரிந்து ஒபாமா கூட்டணிக்கு விஜயைக் கூப்பிடுகிறார். எனக்கு சூலாயுதம் படம் நடிக்க வேண்டும். பெயரும்,ஹீரோயின்,இயக்குனர், தயாரிப்பாளர் தான் வேற.கதை அதே தான்.எனக்கு அது தான் முக்கியம் என்று சொல்லி விட்டு வர. தொல்லை தாங்க முடியாமல் ஒரு கேஸ் போடலாமா என்று ஆட்சியாளர்கள் யோசிக்கிறார்கள். ரசிகர்கள் (அவர் ரசிகர்கள் குறையாமலிருந்தால்) அடுத்த படமாவது நல்லா வந்து விடாதா என்று நப்பாசையோடு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

Sunday, 9 October 2011

சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் செக்ஸ் அதிகாரி! பகீர் தகவல்கள் அம்பலம்


இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் உள்ள காமவெறி பிடித்த அதிகாரி ஒருவரின் செக்ஸ் தொல்லைகள் தாங்க முடியாத அளவுக்கு எல்லை மீறிய வண்ணம் உள்ளன.
குறித்த அதிகாரியின் செக்ஸ் தொந்தரவினால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்களினால் நேரடியாக வழங்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் தமிழ் சி.என்.என் இன் விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவு விசாரணையினை மேற்கொண்டது.
இந்திய வம்சாவழித் தமிழர் போல பேசக் கூடிய குறித்த அதிகாரி துணைத் தூதரக அலுவலகத்துக்கு வரும் பெண்களை செக்ஸ் வலையில் வீழ்த்த புது உத்தியை கையாண்டு வந்துள்ளார்.
குறித்த அலுவலகத்துக்கு அனேகமானோர் கடவுச்சீட்டு புதுப்பித்தல், கடல்வழியாக அகதியாக வந்து புதிய கடவுச்சீட்டு வாங்குவதற்காகவுமே வருகின்றனர்.

இவ்வாறு வருபவர்கள் குறிப்பாக பெண்களிடம் "இது செய்ய முடியாத காரியம்", "இலங்கையில் நீ எங்கு இருந்தாய்?", "இந்தியா வர யார் உதவினார்கள்" என்பது போன்ற விசாரணைப்பாணியில் கேள்விகளை கேட்டு கொடுக்கி போட்டு அவர்களை முதலில் பயமுறுத்துவார்.
பின்னர் நான் உங்களைக் கவனித்துக்கொள்கிறேன், உங்களின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்துவிட்டுப் போங்கோ, தேவைப்படும் போது போன் பண்ணுகிறேன் என்று கூறி நம்பர் வாங்கி விட்டு அனுப்பி விடுகிறார்.
இரவு பத்து மணி, பன்னிரண்டு மணிக்கெல்லாம் போன் செய்து குறித்த பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பது இவரது புதிய பாணி.
இரவு 12 மணிக்கு போன் பண்ணி பாஸ்போர்ட்டில சந்தேகம் கேட்கிறாராம். அதுவும் கணவன் வெளிநாட்டில் உள்ள பெண்களையும், கணவரே இல்லாத விதவைப் பெண்களையும் குறி வைத்தே இவர் தனது வலையில் வீழ்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
காம வெறி பிடித்த குறித்த அதிகாரிக்கு அலுவலக நேரமில்லாத அதுவும் பின்னிரவு நேரத்தில் தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி பாஸ்போர்ட் தொடர்பாக பேச வேண்டிய தேவை தான் என்ன?
இந்நடவடிக்கைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் இரு மாதங்களுக்கு முன்னர் எம் கவனத்துக்கு கொண்டுவதை தொடர்ந்து தகுந்த ஆதாரம், மற்றும் மேலதிக தகவல்களை திரட்டும் முயற்சியில் எமது விசேட புலனாய்வுச் செய்திப் பிரிவு களமிறங்கியது.
இதன்போது தான் பல பெண்கள் இந்த வகையில் பாதிக்கப்படிருப்பதும், தங்கள் அலுவலகத் தேவைகளை பூர்த்தி செய்ய அங்கு சென்று குறித்த அதிகாரியின் காம வலையில் மாட்டிக் கொண்டமையையும் அறிந்து கொள்ள முடிந்தது.
இப்படியான காமப் பிசாசுகளை எதற்காக துணைத் தூதரகத்தில் வைத்திருக்கிறார்களோ தெரியாது.
முள்ளிவாய்காலில் ஒன்றும் அறியா அப்பாவிப் பெண்களை கதறக் கதறக் கற்பழித்தது போல ஏழுகோடித் தமிழ் மக்கள் உள்ள தமிழ் நாட்டிலும் செக்ஸ் தொல்லைகளை ஆரம்பித்து விட்டனர் இந்த சிங்களத்தின் அடிப் பொடிசுகள்.
குறித்த விடயம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு ஈழத் தமிழ் பெண்களை குறித்த காம அதிகாரியிடம் இருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறித்த அதிகாரியின் செக்ஸ் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் அவர்கள் வழங்கிய தகவல்களின் குரல் பதிவுகள் எமது செய்திப் பிரிவின் வசம் உள்ளன.
குறித்த பெண்களின் பாதுகாப்புக் கருதி அவற்றை நாம் வெளியிடவில்லை.
ஆனால் காம வெறி பிடித்த குறித்த அதிகாரி தொடர்பான முழுமையான விபரங்களை விரைவில் எமது செய்தித்தளத்தில் எதிர்பாருங்கள்.....
-தமிழ் சி.என்.என் இன் சிறப்புச் செய்திப் புலனாய்வுப் பிரிவு-

Saturday, 16 July 2011

ஆபாச பதிவு எழுதுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அதிகாரவர்க்கம் மட்டுமே ஆட்கொண்டுள்ள நம் நாட்டில் நம் கருத்துக்களை அதிகாரமாக கூற கூட இங்கு வழியில்லை. அப்படியே நாம் கூறினாலும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்தால் தான் நாம் பேசும் இடத்திலாவது உட்காரும் மனநிலமைக்கு நம் மக்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் நம் கருத்துக்களை எந்த வித தங்கு தடையின்றி குறிப்பாக எந்த மூலதனமும் செய்யாமல் வெளியிட உதவும் மிகப்பெரிய சேவையை இந்த பிளாக்கர் தளம் நமக்கு வழங்கி உள்ளது. ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பாமரன் கூட தன்னுடைய கருத்தை கூறினால் அதையும் படிக்க நான்கு பேர் இந்த இணையத்தில் உள்ளனர் என நினைப்பதில் சந்தோசமாகவே உள்ளது. ஆனால்  இந்த பிளாக்கர் வசதியை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா.
நீங்களே நினைத்து பாருங்கள் இது போன்ற வசதிகள் நமக்கு இல்லையென்றால் தங்கள் கருத்தை எப்படி வெளிப்படுத்தி இருக்க முடியும்.யாராவது கேட்டிருப்பார்களா அனால் இந்த பதிவுலகத்தில் நீங்கள் இங்கு பதிவு போட்ட அடுத்த வினாடியே உலகம் முழுவதும் உங்கள் பதிவுகளை பார்க்கிறார்கள் நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் அனைவரிடமும் பரவுகிறது. இது போன்ற அற்புத வசதியை நாம் ஒழுங்காக பயன்படுத்துகிறோமா. இந்த பொன்னான வசதியை நாம் வீணடித்து கொண்டே இருக்கிறோம் என நான் நினைக்கிறேன். உண்மையும் அது தான். 

ஏதேதோ பதிவு எழுதுகிறார்கள் அதையெல்லாம் விட்டு இந்த ஆபாச பதிவர்களை மட்டுமே ஏன் எச்சரிக்கை செய்கின்றேன் என்றால் அடுத்த உலகை ஆளப்போகும் இளைஞர்களில் பாதிக்குமேல் வழிதவறி செல்ல முக்கிய காரணமாக உள்ளது இந்த ஆபாசம் தான். டிவிக்களிலும் செய்திதாள்களிலும் போடறாங்க அவங்களையெல்லாம் கேட்கல நம்பள மட்டும் கேட்க்க வந்துட்டாரு பெரிய பு..... மாதிரி அப்படின்னும் நம்ம நண்பர்கள் ஒரு எதிர்கேள்வி கேட்பாங்க அவுங்களுக்கு என்னுடைய ஒரு எதிர்கேள்வி.
டிவிக்காரன், பத்திரிக்கை காரர்களே திருந்தவே மாட்டிங்களே என்று நாம்மால ஒரு கேள்வி கேட்க முடியுமா அப்படியே கேட்டால் அவர்களின் ஒரே பதில் நீங்கள் என்ன யோக்கியமா உங்களில் எத்தனை பேர் இந்த ஆபாசத்தை எழுதுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா என்று நம்மையே திருப்பி கேள்வி கேட்பார்கள். நம்மில் ஒருவர் தப்பு செய்தாலும் அந்த பழி மொத்த பதிவுலகத்தையே சாரும். எனக்குள் உள்ள ஒரு கேள்வி இந்த மீடியாக்கலாவது பெரிய முதலீடு பண்ணி இருப்பதால் அவர்களின் வருமானத்தை பெருக்கி கொள்ள இது போன்ற செயல்களில் ஈடு படுகிறார்கள். ஆனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் நம் பதிவர்கள் ஏன் இது போன்று எழுதுகிறார்கள் ஹிட்ஸ் காகவா கேவலம் இந்த ஹிட்ஸ் வாங்குவதால் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆங்கிலத்தில் எழுதினாலும் கூகுள் அட்சென்ஸ் மூலமாவது ஒருதொகை கிடைத்திருக்கும் தமிழில் எழுதுவதால் கேவலம் இதுக்கு கூட தகுதி அற்றவர்களாக நம்மை ஒதுக்கி வைத்துள்ளார்கள் அப்படி இருந்தும் நம்மில் பெரும்பாலானோர் நம் சமூகம் கெட்டுபோக நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பதை  யோசிக்காமல் இது போன்ற பதிவுகளை எழுதுகிறார்களா என நினைக்க தோன்றுகிறது.

இவரு மட்டும் பெரிய பு........., பெரிய சமூக விழிப்புணர்வு பதிவா போடுறாரு கேவலம் ஆங்கில தளத்துல இருந்து காப்பி அடிச்சி செய்திய என்னவோ இவரே கண்டு புடிச்ச மாதிரி போட்டுக்கிட்டு நம்மள குறை சொல்ல வந்துட்டாரு. நம்மாளுங்க இப்படியல்ல இதுக்கு அதிகமாகவே அசிங்கமாகவும் என்னை திட்டலாம் காரணம் நமக்கு தான் ஏதாவது நம்ம பத்தி உண்மைய சொன்னாலே அப்படியே கால்ல இருந்து தலை வரை பத்திகிட்டு எரியுமே.  அவங்ககளுக்கான என் பதில் என்னால் என் நெஞ்சை நிமித்தி சொல்ல முடியும் என் எழுத்தால்  என் சமூகத்தில் ஒருவர் கூட பாதிப்படைய வில்லை, என்று உங்களால் கூற முடியுமா? 

நான் ஒருத்தன்  மட்டும் திருந்தினால் இந்த ஒட்டுமொத நாடும் திருந்தி விடுமா என்று என நீங்கள் நினைத்தால் முதலில் நம்மை திருத்தி கொண்டால் தான் மற்றவர்களை திருத்தும் தகுதி நமக்கு உண்டாகிறது. ஒரு இளைஞன் திருந்தினால் அவன் ஒருவனுக்கு மட்டும் தான் பயன் ஆனால் ஒரு பதிவர் திருந்தினால் குறைந்தது பத்து இளைஞர்களை திருத்தும் சக்தி அவரின் எழுத்துக்களுக்கு உண்டு என்பதை யாரும் மறக்க வேண்டாம். 

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம் இவ்வளவு சொன்ன பிறகும்  பிளாக்குகளில் செக்ஸ் பற்றியோ ஆபாசமாகவோ எழுதக்கூடாதா. இயற்க்கை நமக்கு வழங்கி உள்ள அற்ப்புத உணர்வு செக்ஸ் அதை பற்றி எழுதக்கூடாதா என்று சில கேள்வி மனதில் தோன்றினால் என்னுடைய பதில் நீங்கள் உங்கள் விருப்பம் போல எழுதிகொள்ளுங்கள் என்பதாகும் (இவ்வளவு கூறிய பிறகும் இவனுங்க எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன என்று நீங்கள் கூறும் போது உங்களை ஒன்னும் பண்ண முடியாது) ஆனால் அப்படி எழுதும் போது  உங்கள் பிளாக்குகளுக்கு நீங்கள் Adult Content Warning என்ற வசதியை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். அந்த வசதி இருப்பது எங்களுக்கு தெரியாது, வசதி இருப்பது தெரியும் ஆனால் எப்படி அதை வைப்பது என தெரியாது என்று ஏதாவது சப்பை கட்டு கட்டுபவர்களுக்கு உங்கள் பிளாக்கில் DASSBOARD - SETTINGS - ADULT CONDENT - YESகொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

இதையும் மீறி நாங்களெலாம் தலைப்பிற்கு 18+ போடுகிறோமே அப்புறம் ஏன் அந்த பதிவை படிக்க வருகிறார்கள் என முட்டாள் தனமான கேள்வி உங்கள் மனதில் தோன்றினால் நீங்கள் போடும் பதிவு என் ஒருவனுக்கு மட்டும் பிரச்சினையல்ல என்னுடைய ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் பிரச்சினை என்பதை உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன்.(எத்தனையோ மொழிகளில் பதிவுகள் வெளிவந்தாலும் தலைப்பில் 18+ என்று ஒன்றை கண்டறிந்தது தமிழ் பதிவர்களாக தான் இருக்கும் என நினைக்கிறேன்)
நான் அப்படி தான் எழுதுவேன் உன்னால என்ன பண்ண முடியும்:

இவ்வளவு கத்திய பிறகும் நீங்கள் இவற்றில் எதையும் கடைபிடிக்க வில்லை என்றால் அவர்களுக்கான என் எச்சரிக்கை உங்கள் பிளாக்கை பற்றி திரட்டிகள், பிளாக்கர், கூகுள் தளங்களில் புகார் கூறினால் உங்கள் நிலைமை என்னவாக இருக்கும். திரட்டிகளும், பிளாக்கர் மற்றும் கூகுள் தளங்கள் ஒரு போதும் இந்த தளங்களை அனுமதிப்பதில்லை. பிளாக்கர் தளத்தில் புகார் செய்தால் அது உங்கள் பிளாக்கை செயல் இழக்க வைக்கலாம். கூகுள் உங்கள் தளத்தை சாதாரணமாக தேடலின் போது உங்கள் தளத்தை தடை செய்யும். ஆபாச சம்பந்தமாக தேடும் போது மட்டுமே உங்கள் பிளாக் வர வாய்ப்பு இருக்கலாம். மற்றும் திரட்டிகளும் ஒருபோதும் இந்த தளங்களை அனுமதிப்பதில்லை என்று அவர்களின் விதிமுறைகளில் கூறி உள்ளனர்.


(நண்பர்களே மேலே உள்ள அனைத்தையும் விடுங்கள் உங்கள் வீடுகளில் உங்கள் தம்பியோ,தங்கைகளோ இது போன்று ஆபாச பதிவுகளை படிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா என்பதை மனச்சாட்சியோடு யோசித்து பாருங்கள், மற்றவர்களையும் நம் தம்பி, தங்கைகள் போல பாவித்து இது போன்ற பதிவுகளை இனி தயவு செய்து எழுத வேண்டாம் என்று உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்).

Thursday, 14 July 2011

கட்டுக்கடங்காத ரசிகர்கள்... போலீஸ் தடியடி! (காணொளி இணைப்பு)


சென்னை: சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலையத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள்.

குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே உண்மையைத் தெரிவித்தனர்.

இதனால் அடித்துப் பிடித்துக் கொண்டு கார்கோ பகுதி வாயிலுக்கு சென்றனர். பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இந்த வழியாகத்தான் விமான நிலையத்துக்குள் செல்வார்கள். ரஜினி வருகையையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தது.



ஆனால் ரஜினி வந்த போது, இந்த போலீஸால் கூட அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் பேச நடந்த வந்த ரஜினியால், பேச முடியாத சூழல் ஏற்பட்டது. காரில் ஏறிப் புறப்பட்ட அவரை, மறித்துநின்ற ரசிகர்கள், அவரை அருகில் போய் பார்க்க முயன்றனர்.



இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது, ரஜினி பயணித்த காரின் பேனட் உடைந்தது. காரின் வைப்பர்களும் பிய்ந்தன. காரை ஒரு அடி கூட நகரவிடாமல் ஒரு கூட்டம் தடுத்ததால் கடுப்பான போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். ஒரு ரசிகருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.

மேலும் சிலருக்கு வெளியில் தெரியாவிட்டாலும் உள்காயம் ஏற்பட்டது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே ரஜினி பெரும்பாலும் தனது பயணத் திட்டங்களை மீடியாவின் வெளிச்சத்துக்கு வராமல் பார்த்துக் கொள்கிறார் என்றார் ரஜினியின் உதவியாளர்.

ஒரு தமிழ் இளைஞனின் உள்ள குமுறுல்(காணொளி இணைப்பு)


எமது தளத்தில் பலவிதமான விநோதங்களை கண்டு ரசித்திருப்பீர்கள். பிரமித்தும் இருப்பீர்கள் ஆனால் இன்றும் நாம் தரும் செய்தி ஒரு தமிழ் இளைஞனின் உண்மை நிலையினை நகைச்சுவையாக சொல்லுகிறார் பாருங்கள்.

பொதுவாக இன்றைய கால கட்டத்தில் தமிழ் சமூகத்திற்கு வெளிநாடு செல்வது என்பதே பெரும் கனவாகவும் அதுவே முக்கியமானதொன்றாகவும் உள்ளது.
வெளிநாடு ஒன்றில் கால் எடுத்து வைக்கும் வரை எத்தனை விதமான துன்பங்கள், கொடுமைகள் நிறைந்து இருக்கின்றது. புலம்பெயர் நாடு ஒன்றில் வாழும் இளைஞர் ஒருவர் தனது மனைவியின் வரவை எண்ணி மொட்ட தலையாய் போன சோகத்தை பாருங்கள்.
"இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை" என்பது எம் தமிழ் சமூகத்திற்கு மிகவும் பொருத்தும் என்பதே இக் காணொளியின் வெளிப்பாடு.
வெளிநாட்டு கனவுடன் வாழும் தமிழ் இளைஞர்களுக்கு சிந்திக்க வைக்கவே பாரிஸ்தமிழ் இக்கொணியை வாசகர்களாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றது.

Tuesday, 12 July 2011

புலம்பெயர் தமிழர்களை அடக்க கோத்தபாய போட்ட திட்டம்


 சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புகளை மடக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறார் போராளிகள் விவகாரத்தை, புலிகள் ஆதரவு புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக முன்வைத்து, அவற்றின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறும் விவகாரங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு வலியுறுத்தும் இந்த அமைப்புகள் சிறார் போராளிகள் விவகாரத்தைத் தட்டிக் கழிக்க முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் கூறியுள்ளன.

விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைவர்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, வெளிநாடுகளில் நிதி சேகரித்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து அனுப்பிய வகையில் இந்த அமைப்புகள் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

இதற்கு முன்னோடியாக கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சிடம் யுனிசெவ் வெளியிட்ட அறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் கையளித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் காணாமற்போன சிறார்கள் தொடர்பான அந்த அறிக்கையை அலரி மாளிகையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச லியம் பொக்சிடம் கைளித்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்தவார இறுதியில் அந்த அறிக்கை கோத்தாபய ராஜபக்சவின் கைக்குக் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

வடக்கு மாகாணசபையின் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்துடன் இணைந்து யுனிசெப் நடத்திய விசாரணைகளின் போது, காணாமற்போன பெரும்பாலான சிறார்களை விடுதலைப் புலிகளே கட்டாயமாக படைகளில் சேர்த்துக் கொண்டதாக அவர்களின் பேற்றொர் கூறியுள்ளனர்.

காணாமற்போன சிறார்கள் குறித்த 676 முறைப்பாடுகளில் 64 வீதமானவை விடுதலைப் புலிகளால் சிறார் போராளிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை வைத்துக் கொண்டு, பிரித்தானிய அரசாங்கத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் லியம் பொக்சுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வலுவாக ஆதரித்தவர் லியம் பொக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வந்த அவரைக் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணகளை வலியுறுத்தும் புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிராக பிரித்தானியாவைத் திருப்பி விடும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாயின் உடலத்தோடு பல நாட்களைக் கழித்த குழந்தை


Bordeaux நகரத்தில் அவசர முதலுதவிப்படையினர் 3 வயதுக் குழந்தையொன்றை அதன் தாயின் உடலத்துக்கருகிலிருந்து மீட்டுள்ளனர். குழந்தையின் தாய் இறந்து பல நாட்கள் ஆகியிருந்துள்ளது.
        இறந்தவரின் சகோதரி தன் சகோதரியிடமிருந்து சில நாட்களாக அழைப்பு எதுவும் வரவில்லையென்றும் தொலைபேசிக்கும் பதிலளிக்கவில்லையென்றும் கொடுத்த முறைப்பாட்டைஅடுத்து நான்காம்



மாடியிலிருந்தஇறந்தவரின் வீட்டைத் தீயணைப்புப் படையின் உதவியுடன் கண்ணாடியை உடைத்து உள் நுழைந்த போது சகேதரி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அருகே நலிந்த நிலையில் 3 வயதுக் குழந்தை இருந்தது.
வீடு முழுவதும் எஞ்சியிருந்த உணவுகள் சிதறிக்கிடந்தன. குழந்தை அவற்றை உண்டும் பிஸ்கட்களையும் கேக் போன்றவற்றையும் உண்டும் இருந்துள்ளது. மருத்துவர்களின் ஊகத்தின் படி இது இயற்கை மரணமென்றும் இறந்து நாட்கள் பல ஆகியுள்ளதெனவும் தெரிவித்தனர்.
உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு பராமரிக்கப்படுகின்றது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து எதுவுமில்லையென வைத்தியர்கள் உறுதியளித்துள்ளனர். மேலும் இந்தக் குழந்தையின் தந்தையும் சில மாங்கள் முன்னரே இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஆசியாவின் பந்த பாசக் கூட்டு வாழ்க்கையை விமர்சித்துக் கொண்டு பாசங்களையும் பந்தங்களையும் தூர வைத்துவிட்டுத் தனி வாழ்க்கை  வாழும் இவர்கள் வாழ்க்கை முறை இறந்தால் கூட அழுகி துர்நாற்றம் வந்தால் பிறகே அறியும் நிலைக்கே தள்ளப்பட்டுக்கொண்டு வருகின்றது. 

Friday, 1 July 2011

ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்! தமிழ்நாட்டில் சம்பவம்

தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களான ரகுநாதன், தேவதர்சினி தம்பதிகளின் 3 வயதுடைய இரண்டாவது குழந்தை மீது நேற்று முன்தினம் இரவு முதலியார் குப்பத்தை சேர்ந்த 23 வயதான சுகுமாரன் என்ற மீனவர் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக   ஈழத்தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில் அவர்களின் குடிசைக்குள் நுழைந்து குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அலறல் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வருகையில், சந்தேகநபர் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான்.

அயலவர்களும் துரத்தவே குழந்தையை கீழே எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளான். இதனால் காயமடைந்த குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை பெரிது படுத்தக்கூடாது என காவல்துறையினர் ஈழத்தமிழ் அகதிகளை அச்சுறுத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, 24 June 2011

பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை : ஈழத்தமிழன் சாதனை

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார் ஒரு ஈழத்தமிழர். 

பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைச சேர்ந்த Dr.சிதம்பரநாதன் சபேசன் என்பவரே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார். 

ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்க இத்தொழினுட்பம் பெரிதும் உதவி புரியும்.

ஏற்கனவே பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்பாட்டில் உள்ள போதிலும், அவை மின்கலன் இருந்தால் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவை. அத்துடன் அவற்றின் உற்பத்திச்செலவும் மிகவும் அதிகமாகும். 

ஆனால், டாக்டர்.சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்று கூறப்படுகிறது.  

இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கு தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் இந்த சாதனைத் தமிழர்.

Thursday, 23 June 2011

திகாரில் மெழுகு வர்த்தி செய்யும் கனிமொழி


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது.

கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருகிறார்.

அதே நேரத்தில் தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டு வருகிறார்.

தனது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சக கைதிகள், காவலர்களிடம் இயல்பாகப் பழகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இந் நிலையில் முன்பு வேறு சில பெண் கைதிகளோடு சேர்த்து அடைக்கப்பட்டிருந்த கனிமொழி தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறை இயக்குநர் ஜெனரல் நீரஜ் குமார் கூறுகையில், சக கைதிகளிடையே அவ்வப்போது நடைபெறும் சண்டைகளில் கனிமொழி சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கனிமொழியை தனி அறைக்கு மாற்றியுள்ளோம். கனிமொழி சிறை விதிகளை முழுமையாகவும், கண்டிப்போடும் கடைப்பிடிக்கிறார் என்றார்.

தினமும் திமுக தலைவர்கள் பலர் கனிமொழியைச் சந்திக்க வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிம்மிற்கும் போக வேண்டாம். நிறைவான தாம்பத்யமே போதும்

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு? என்று கேட்கின்றனர் மருத்துவர்கள்

நிம்மதியான உறக்கம்


நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது.

உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்

பெண்களுக்கு அதிக உற்சாகம்

தாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.

மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.

மாயமாகும் கலோரிகள்

30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும்.

வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கற்பனைத் திறன்


தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும். படுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன?. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.

விஜய்யை முந்திய சூர்யா


ர‌‌ஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு இருந்தது. ஆமாம், இருந்தது. இப்போது அந்த இடத்தில் சூர்யா.
விஜ‌ய்யின் ஆறு படங்கள் அடுத்தடுத்து சுமார் மதிப்பெண் வாங்கியதும், சூர்யாவின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதும்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலாயுதம் படத்துக்கு விஜய் 13 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. மாற்றான் படத்துக்கு சூர்யாவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் பதினைந்து கோடிகளாம். படம் அறுபது கோடிக்கு மேல் விலை போகும் என்று இப்போதே கணித்திருக்கிறார்கள்.
விஜய்யின் வேலாயுதமும், நண்பனும் வெற்றி பெற்றால் சூர்யாவை விஜய் எளிதாக முந்திவிடுவார் என்பதும் முக்கியமானது.

Wednesday, 22 June 2011

அம்மா ஆகப்போகும் ஐஸ்வர்யாராய்


 முன்னால் உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யாராய் அம்மா ஆகப்போகிறார்.இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று உறுதிப்படுத்தினார்.”நான் தாத்தா ஆகப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.
இதுகுறித்து அமிதாப் தனது டிவிட்டர் இணையதள பக்கத்தில் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் அமிதாப் கூறியுள்ளார்.
மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் அமிதாப் கூறியுள்ளார்.

Sunday, 19 June 2011

"அவன் இவன்"விமர்சனம்

பாலாவின் படம்! ஆனால் பலான, பலான படமோ...? எனும் சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கும் படம் தான் "அவன் இவன்". பின்ன என்னங்க? "பிதாமகன்" படத்தில் சிம்ரனையே ஒரு பாடல் காட்சியில் போர்த்தி கொண்டு ஆடவிட்ட பாலா, இதில் வயதான ஜமீன்தார் ஜி.எம்.குமாரை நிர்வாணமாய் ஓட செய்து, அவரை துரத்தி துரத்தி வில்லன் ஆர்.கே.வை விட்டு கொல்வதும், அம்மணமாய் தூக்கில் தொங்கவிட்டு ஊரையே வேடிக்கை பார்க்க வைப்பதும் "ஏ" ரகம் என்றால், ஹீரோக்கள் விஷாலும், ஆர்யாவும் கிராமத்து யதார்த்தம் எனும் பெயரில் பேசும் சில வசனங்களும், சில செய்கைகளும் அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் "பி" ரகம்!

கதைப்படி ஊர் பெரிய மனிதர், ஜமீன் தீர்த்தபதி, இத்யாதி... இத்யாதி எல்லாம் சேர்ந்தது தான். படத்தில் கேரக்டர் ஆர்‌ட்டிஸ்ட் ஜி.எம்.குமாரின் பாத்திரம்! ஓட்டு மீசையுடன் கொட்டமடிக்கும் அவருக்கு உற்ற துணையாக வாழும் பாத்திரங்கள், வால்டர் வணங்கா முடி விஷாலும், அவரது தம்பி கும்புடறேன் சாமி ஆர்யாவும். எலியும் பூனையுமாக திரியும் இந்த இருவருக்கும் திருடுவது தான் குலத்தொழில்! திருட போகவில்லையென்றால் சாமி குத்தம் என இவர்களை கொம்பு சீவிவிடும் சக்களத்தி தாய் குலங்கள் அம்பிகா -  பிரபா ரமேஷ் இருவரும்! இவர்களின் செட் பிராப்பர்ட்டி புருஷன் - அனந்த் வைத்தியநாதன்.

ஒன்றரை கண்ணும், பொம்பளை வேஷமுமாக திருட்டு தொழிலுடன் திரியும் விஷாலுக்கு, பெண் போலீஸ் ஜனனி அய்யர் மீது காதல்! ஜட்ஜ் வீட்டு லாக்கருக்கே கள்ளச்சாவி செய்து சபாஷ் வாங்கும் கும்புடறேன் சாமி (படத்தில் இதுதான் அவரது பாத்திரப்பெயர்...) ஆர்யாவுக்கு ஜமீன் ஜி.எம்.குமாரின் பரம்பரை விரோதி மகள் மதுஷாலினி மீது காதல். இவர்களையும், இவர்களது க‌ாதலையும் வைத்துக் கொண்டு படத்தை என்னமாய் காட்சி பண்ணி இருக்கிறார் பாலா!! சில பல அநாகரீக வசனங்களை தவிர்த்து பிரமாதமாய் காட்சிகள் பண்ணியிருக்கும் இயக்குநர் பாலா, கதையில் கோட்டை விட்டிருப்பதுதான் அவன் இவன் படத்தின் பலவீனம்!

வால்டர் வணங்காமுடியாக விஷால் ஒன்றரை கண் பாத்திரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதுவும் பொம்பளை வேஷத்தில் அவர், ஆரம்ப காட்சியில் ஜி.எம்.குமாருடன் சேர்த்து ரசிகர்களையும் வசியம் பண்ணும்படி போடும் ஆட்டம் பிரமாதம். நிச்சயம் விஷாலுக்கும் விருதுகள் பல காத்திருக்கின்றன.

விஷாலாவது ஒன்றரை கண்ணுடன் கஷ்டப்பட்டு ரசிகர்களை கவருகிறார். ஆனால் அவரது தம்பியாக ஆர்யா அடிக்கும் லூட்டிகள் செம பியூட்டி! அசால்டாக சட்டி கிராப்பும், சுட்டி தனமுமாக ஒரு சில இடங்களில் விஷாலையே தூக்கி சாப்பிடுட்டு விடுகிறார் ஆர்யா!

ஜனனி அய்யர், மது ஷாலினி இருவரும் புதுமுகங்கள் என்பதையும் தாண்டி பளிச்சிட்டிருக்கின்றனர். ஜி.எம்.குமார், ஜமீன் தீர்த்தபதியாக மனதில் பதிகிறார். க்ளைமாக்ஸ்க்கு இரண்டு ரீல்களுக்கு முன்பே எண்ட்ரியாகும் ஆர்.கே., தன் கொடூர வில்லத்தனத்தால் ரசிகர்கள் மனதில் வியாபித்து விடுகிறார். டி.எஸ்.பி., கனவுடன் சப்-இன்ஸ்பெக்டர் சின்னாண்டி கேரக்டரில் புதியவர் கே.ராமராஜ் பண்ணும் கள்வர்களுக்கு கறிவிருந்து உள்ளிட்ட கலாட்டாக்களிலும், ஆர்யாவின் நண்பன் பேத்தையாக மாஸ்டர் வி.விக்னேஷ் பண்ணும் சிரிப்பு சேட்டைகளிலும் கூட இயக்குநர் பாலா தெரிவது "அவன் இவன்" படத்தின் பலம்!

விஷால் - ஆர்யா மட்டுமல்ல... "அவன் இவன்", இசையமைப்பாளர் யுவனும் தான் எனச் சொல்லும் அளவிற்கு யுவனின் பின்னணி இசை தான், படத்தின் சில காட்சிகளை போரடிக்காமல் போக செய்கிறது. பேஷ்! பேஷ்!

இசையமைப்பாளர் யுவன் மாதிரியே, ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன், படத்தொகுப்பாளர் - சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநர் - டி.முத்துராஜ், வசனகர்த்தா - எஸ்.ராமகிருஷ்ணன் என ஏகப்பட்ட பிரம்மகர்த்தாக்கள், பிரமாண்டங்கள் இருந்தும் இயக்குநர் பாலா பல இடங்களில் படுத்தி எடுத்திருக்கிறார்.

எப்படிபார்த்தாலும் "அவன் இவன்" கொஞ்சகாலம் தியேட்டரில் போவான்! ரொம்ப காலம் தமிழ் சினிமாவில் பேசப்படுவான்!!

Friday, 17 June 2011

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார் ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரணமாக நலமடைந்து விட்டதால், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டார் என்று சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்

 
ராணா படத்தின் துவக்கவிழாவின் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து உடல்நலம் சீராகாமல் போகவே சிங்கப்பூரிலுள்ள மௌண்ட் எலிசபெத் மருத்துவ மனையில் அவரை சேர்த்தனர்.
 
அங்கேயே அவரது குடும்பத்துடன் தங்கி, சிகிச்சை பெற்று வந்தார் ரஜினிகாந்த். தற்போது சூப்பர் ஸ்டார் முற்றிலும் குணமடைந்து விட்டார் என்பதால் அவர் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்.
 
அங்குள்ள ப்ளெஷ் அபார்ட்மெண்டில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார் அவரது மனைவி லதா ரஜினிகாந்த். அந்த வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஓய்வெடுக்கும் ரஜினி, தேவைப்படும்போது மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்.
 
இதுகுறித்து நடிகர் தனுஷ், அவரது டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்திருப்பதாவது;
 
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரணமாக நலமடைந்து விட்டதால், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். தற்போது அங்கேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Thursday, 16 June 2011

கணணியினை அதிகநேரம் உபயோகப்படுத்துபவரா நீங்கள்?.


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.
 
உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.
 
க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
 
கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.
 
மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.
 
சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.
 
பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.
 
முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.
 
அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.
 
மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.
 
புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
 
பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.
 
அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

தென்தமிழீழ மாணவன் கண்டுபிடித்த சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்!

தென்தமிழீழ மாணவன் கண்டுபிடித்த சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்!
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் நடராஜா சஞ்ஜீவநாத் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சூரிய சக்தியில் இயங்கும் இம் மோட்டார் கார் கண்டு பிடித்ததன் மூலம் தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் வீ.பிரபாகரன் தெரிவித்தார்.
சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் காரினை தயாரிக்க 22,000 ரூபா செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் செல்ல முடியும். அத்தோடு அங்கவீனமானவர்களுக்கும் சிறுவியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் மிகவும் பொருத்தமானதாகவும் பாதுகாப்பான வாகனமாகவும் உள்ளதாகவும் மணிக்கு 25 கிலோ மீற்றர் வேகத்தில் இது பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது. வெகு விரைவில் நீரிலும் நிலத்திலும் செல்லக் கூடிய வாகனம் ஒன்றை தயாரிக்கவு    ள்ளதாகவும் இந்த மாணவன் சஞ்ஜீவநாத் தெரிவித்தார்.

Friday, 10 June 2011

புதியதொரு சிக்கலில் நயன்,பிரபுதேவா திருமணம்..

பிரபல நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பெயரெடுத்த பிரபு தேவா, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் ஜூலையில் நடப்பதாக இருந்தது. அது இப்போது ஆகஸ்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து சிக்கலில் இருந்து விடுபட்ட பிரபுதேவா புதியதொரு சிக்கலில் மாட்டியிருக்கிறாராம். இது கொஞ்சம் சிக்கலான பிரச்னைதான். நயன்தாரா தீவிரமான ரோமன் கத்தோலிக் பிரிவை சேர்ந்தவர். அதனால் பிரபுதேவா மதம் மாறி ஞானஸ்தானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நயன்தாராவின் குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

இதை மனதில் வைத்துதான் நயனின் குடும்பத்தினர் திருமணத்தை ஆகஸ்டில் வைத்துக் கொள்ளலாம் என்று பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறார்களாம்.

இப்படியெல்லாமா உங்க வீட்டில் சொல்வாங்க என்று நயனிடம் பிரபுதேவா புலம்பினாராம். இதனால் கோபமடைந்த நயன் தனது குடும்பத்தாரிடம் குமுறி வருகிறாராம்.

உறவினரை தீட்டித் தீர்ந்த ஐனாதிபதி மஹிந்த

தமிழ் மக்களை படுகொலை செய்து போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறீலங்கா அரசு மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரவேண்டும் என தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் ஆத்திரமடைந்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனது உறவினரை திட்டித் தீர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணத்தை கொடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விலைக்கு வாங்கிவிட முடியும் எனவும், அவருடன் சிறீலங்கா அரச தலைவருக்கு ஒரு நல்ல உறவை ஏற்படுத்தித் தர முடியும் எனவும் மகிந்தாவின் உறவினரான திருக்குமார் நடராஜன் தெரிவித்த கருத்தை தான் நம்பியதாகவும், ஆனால் எதிர்மறையான நிகழ்வே நடந்துள்ளதாகவும் திருவை நேரில் அழைத்த சிறீலங்கா அரச தலைவர் உரத்த சத்தத்தில் திட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்போவது தொடர்பில் தனக்கு முன்னரே தெரியப்படுத்தவில்லை எனவும் மகிந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் தான் மகிந்தாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தனக்கு தவறான தகவல்களை கூறி  அமைச்சர்கள் தன்னை இருட்டில் வைத்துள்ளதாகவும் மகிந்தா தெரிவித்துள்ளதாக சிறீலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திரு என அழைக்கப்படும் திருக்குமார் நடராஜா மகிந்தாவின் உறவினரும், பிரதி அமைச்சருமான நிருபாமா ராஜபக்சாவின் கணவரும், பசில் ராஜபக்சாவின் வர்த்தக பங்குதாரருமாவார்.

Wednesday, 8 June 2011

ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ள ரஜினி.


இதுவரை இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகனாகத் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ளார்.
ராணா படத்துக்காக ரஜினிக்கு அளிக்கப்பட்ட சம்பள முன்பணம் ரூ 24 கோடி என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனது சம்பள விவரங்களை ஒருபோதும் மறைக்காதவர் ரஜினி. காரணம் முறைப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, வருமான வரித் துறையிடம் நற்சான்றிதழும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருபவர்.  அவரது மெகா ஹிட் படங்களான சிவாஜி, எந்திரன் போன்றவற்றின் சம்பளத்தை வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.
இப்போது ராணா படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் மற்றும் முன்பண விவரங்களை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஈராஸ் என்பதால், இந்த விவரங்களை முறைப்படி அறிவித்துள்ளது ஈராஸ். இதன்படி, ராணாவுக்கு ரஜினிக்கு அளிக்கப்பட்டுள்ள முன்பணம் ரூ 24 கோடி.  படத்தின் விற்பனைக்குப் பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு மீதிச் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இதுவரை இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று கூறப்பட்டு வந்த ரஜினி, இப்போது ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளார்!

Tuesday, 7 June 2011

ஈழத்தமிழருக்கு சேவைகள் செய்யத் தயங்கமாட்டேன்” பா.விஜய்

“திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன் என கொழும்புப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் கவியரங்கத்துக்குத் தலைமை வகிப்பதற்காக இலங்கை வந்திருக்கும் பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய் தெரிவித்தார்.

கேள்வி: நீங்கள் பெற்ற தேசிய விருதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்:
பதில்: தேசிய விருது என்பது இந்திய தேசத்தினுடைய பெருமிதமான ஒரு விருது. ஆட்டோகிரேப் திரைப்படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே” பாடலுக்காக இவ்விருது எனக்கு கிடைக்கப்பெற்றது.
தன்னம்பிக்கையை இளைய சமூகத்தினர் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதே எனது பாரிய கனவு. அதை நான் இத்திரைப்படப் பாடலின் வாயிலாக நிறைய விதைத்தேன்.
மிகப்பெரிய இளைய சமூகம் இவ்வளவு கல்வியறிவு, பொருளாதார முன்னேற்றம் உள்ள ஒரு நாட்டில் பின்னோக்கி செல்கின்றார்கள் என்பது விசித்திரமானது.
இந்த இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் உணர்வு எனக்கு உள்ளதுடன் எனக்கு தன்னம்பிக்கை உணர்வுகள் பற்றிய கருத்துக்கள் மீது இருந்த அபரிதம் காரணமாகவும் இப் பாடல் இயற்றப்பட்டது.
 
கேள்வி: நீங்கள் நடித்த திரைப்படமான இளைஞன் திரைப்படத்தைப்பற்றி…
 
பதில்: கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இத்திரைப்படமானது சிறிய பட்ஜெட் உடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் பட்ஜெட் ரீதியிலும் கதையிலும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கதைக்களமாக மாறியது.
இத்திரைப்படத்தில் குஷ்பு, மீராஜெஸ்மின், நமீதா, வடிவேலு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கலைஞரின் வசனத்தில் உருவாகிய இத் திரைப்படத்தில் எனக்கு நடிக்கக் கிடைத்தது பெரிய பாக்கியம் என்றே கூற வேண்டும்.இவ்வாறு ஒரு பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படம் மீண்டும் உருவாகும் என்பது சந்தகம்
.
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கும் நீங்கள் கூற விரும்புவது என்ன?
 
பதில்: நான் நிறைய தமிழர்களை சந்தித்தேன். அவர்கள் அனைவர் மத்தியிலும் நிறைய கருத்துக்கள் உள்ளன அவை அனைத்தும் ஒருமித்த கருத்துக்களாக மாற வேண்டும்.
இப்போது நிலவும் அமைதி எப்போதும் நிலவ வேண்டும். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படாதவர்கள் என யாரும் கிடையாது. ஒவ்வொரு தமிழரும் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அதிலிருந்து வெளிவந்து மீண்டும் ஒரு சகஜ வாழ்க்கையை முன்னெடுப்பது என்பது எல்லோர் மத்தியிலும் உள்ள ஒரு வினா.
வெளிநாடுகளில் உள்ள சொந்தங்கள் தமக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விகளும் இவர்கள் மத்தியில் உண்டு.
 
இதற்கு எல்லோரும் சொல்வதைப்போல நானும் தமிழ் நாட்டில் இருந்து உதவி பெற்று தருகிறேன் என சொல்வதற்கு நான் ஒன்றும் பெரிய அரசியல்வாதியோ அல்லது அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கும் பெரிய சக்தியோ கிடையாது.
திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன்.
 
கேள்வி: நீங்கள் இலங்கைக்கு வந்ததன் காரணம் என்ன?
 
பதில்: நான் இலங்கைக்கு வந்தது இதுவே முதன் முறை என்பதுடன், கொழும்புப் பல்கலைகழகத்தின் மாணவர்கள் நடாத்தும் அழகிய கவியரங்கத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கிறேன். அத்துடன் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமையவுள்ள எனது அடுத்த திரைப்படமான ‘சமர்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான இடங்களைப் பார்வையிடவுள்ளேன்.
 
கேள்வி: வீரகேசரி இணையத்தள வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
 
பதில்: பத்திரிகைத்துறையென்றாலே பொதுவாக ஒரு பழைய பழமொழி உண்டு ஒரு பெரிய செல்வந்தன் தனது செல்வத்தை அழிக்க வேண்டும் என்றால் ஒன்று சினிமாத்துறையை தெரிவுசெய்ய வேண்டும் அல்லது பத்திரிகைத்துறையை தெரிவுசெய்ய வேண்டும்.
இப்படியான ஒரு நிலையிலிருந்து பத்திரிகைத்துறை முன்னேற்றம் கண்டுள்ளதன் காரணம் ஈழத்தமிழர்களின் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளமையே ஆகும்.
ஈழம் போன்ற பின்தங்கிய தேசத்தில் பல போராட்டங்களுக்கு மத்தியிலும் உரிமை மறுக்கப்படும் நிலையிலும் வீரகேசரி பத்திரிகை 80 வருடங்களைப்பிடித்து பல ஆவணங்களை மக்கள் மத்தியில் கொண்டுவருகின்றது.
 
நடப்பதை நிஜமாக வெளிப்படுத்தக்கூடிய தைரியமுள்ள அலுவலர்களை உள்ளடக்கிய வீரகேசரி நூற்றாண்டு விழாவை கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

ராணா கதையில் மாற்றம்..


ரஜினி சிங்கப்பூர் போனதிலிருந்து அவர் பற்றிய செய்திகளிலும் பெரிய அளவில் முன்னேற்றம்! எந்தளவுக்கு என்றால் செப்டம்பரில் ராணா ஷ§ட்டிங்கில் கலந்து கொள்வார் என்கிற அளவுக்கு. அவரது ரசிகர்களுக்கு அல்டிமேட்டான எனர்ஜி சூப் இதுதான் என்றாலும், சென்ட்டிமென்ட்டாகவே சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை மேலும் வலுவாக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.

கதைப்படி மூன்று ரஜினிகளில் ஒருவர் இறந்து போவது இருக்கிறதாம் ஸ்கிரிப்ட். சினிமாவில் கூட அவருக்கு அந்த முடிவு வந்துவிடக் கூடாது என்று நினைத்த கே.எஸ்.ரவிகுமார் இப்போது ரஜினி பிழைத்துக் கொள்வது போல மாற்றிவிட்டாராம்.

இந்த ஸ்கிரிப்ட் மாற்றத்திற்கு பிறகு எல்லாமே நல்ல தொடக்கமாக இருப்பது ஆச்சர்யம்தான். ஏனென்றால் ரஜினிக்கு அளிக்கப்பட்டு வந்த டயலாசிஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக வந்திருக்கிறது முதல் செய்தி.

இதற்கிடையில் இன்னொரு விஷயம். சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஃபுளோரில் ஒரு இந்தியர் கூட வேலைக்காரர்களாகவோ, மேல்மட்ட ஊழியர்களாகவோ இல்லையாம். யூகத்தின் அடிப்படையில் வரும் செய்திகள் குறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Monday, 6 June 2011

18 வயசுக்காக சிம்பு பாடிய பாட்டு!


தனது தந்தை டி.ராஜேந்தர் போலவே நடிப்பு, கதை, டைரக்ஷன், பாடல்வரி அமைத்தல், பாட்டு பாடுதல், நடனம் என்று பல துறைகளில் அசத்தி வருபவர் சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., குறிப்பாக பாட்டு பாடுவதில் வல்லவர். மெலோடியஸ் சாங்ஸ் முதல் குத்துப்பாட்டு வரை தன்னுடைய ரம்மியமான குரலில் பாடி அசத்தியிருக்கிறார்.
இப்போது “18 வயசு” படத்தில், ஒரு பாட்டு ஒன்று பாடி அசத்தியிருக்கிறார். “ரேனிகுண்டா” படத்தை இயக்கிய அதே டீம், மீண்டும் “18 வயசு” என்ற படத்தை இயக்கியுள்ளது. இதில் ஹீரோவாக “ரேனிகுண்டா” ஜானி நடிக்கிறார், பன்னீர்செல்வம் இயக்குகிறார். புதுமுகம் சார்லஸ் என்பவர் இசையமைத்து இருக்கிறார். அடர்ந்த காட்டு பகுதியில் “18 வயசு” ப‌டத்தை இயக்கி உள்ளனர்.
“ரேனிகுண்டா” படத்தை காட்டிலும், “18 வயசு” படம் ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் ஆடியோ ரிலீசானது, வ‌ிரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே சிம்பு, “ரேனிகுண்டா” படத்திலும் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதது.

Saturday, 4 June 2011

சனல் 4 இன் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் :பார்த்தவர்களின் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீர் (காணொளி இணைப்பு )

ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது சனல்4,

இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது.

பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.



இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்குட்பட்டுவிட்டதாக தட்டுத்தடுமாறி கருத்து தெரிவித்திருப்பினும், சனல்4 செய்தியாளர் ஜொனத்தன் மில்ரர் சந்தித்து உரையாட முற்பட்டவேளை 'தனக்கு ஒரு மீட்டீங்' இருப்பதாக கூறி அங்கிருந்து விரைந்து சென்றது காணக்கூடியதாக இருந்தது.

செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியின் கருத்துக்கள்..



சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பார்ப்போரை அழவைத்துள்ளது.



அத்துடன் யுத்தத்தின் இறுதி நேரத்தில் தமிழ்ப்புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை வெளியிடாத மிகவும் பயங்கரமான தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான போர் அவலக் காட்சிகளையும் இந்த ஆவணத் திரைப்படம் தாங்கியுள்ளது.



SriLanka 's Killing Fieldsஇலங்கையின் படுகொலைக் களம் என வெளியான இத்திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி மக்கள் பார்வைக்காக விடப்படும் என சனல்4 செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.