சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரணமாக நலமடைந்து விட்டதால், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டார் என்று சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்
ராணா படத்தின் துவக்கவிழாவின் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து உடல்நலம் சீராகாமல் போகவே சிங்கப்பூரிலுள்ள மௌண்ட் எலிசபெத் மருத்துவ மனையில் அவரை சேர்த்தனர்.
அங்கேயே அவரது குடும்பத்துடன் தங்கி, சிகிச்சை பெற்று வந்தார் ரஜினிகாந்த். தற்போது சூப்பர் ஸ்டார் முற்றிலும் குணமடைந்து விட்டார் என்பதால் அவர் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்.
அங்குள்ள ப்ளெஷ் அபார்ட்மெண்டில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார் அவரது மனைவி லதா ரஜினிகாந்த். அந்த வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஓய்வெடுக்கும் ரஜினி, தேவைப்படும்போது மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் தனுஷ், அவரது டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்திருப்பதாவது;
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரணமாக நலமடைந்து விட்டதால், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். தற்போது அங்கேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.










0 comments:
Post a Comment