அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மற்றும் ஒரு படகு விபத்துக்குள்ளாகியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படகு விபத்துக்குள்ளான நிலையில் அது மூழ்கிக் கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
கொக்கோஸ் தீவுக்கு வடக்காக 257 கடல் மைல் தூரத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்காக அவுஸ்திரேலிய அரசு கடற்படை படகுகளையும் ஹெலிக்கொப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு மேலாக இரண்டு விமானங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த படகில் பயணித்தவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதால் அனர்த்தத்தில் சிக்கியோர் இலங்கையர்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை எவருமே காப்பாற்றப்பட்டதாகவோ, சடலங்கள் மீட்கப்பட்டதாகவோ தகவல்கள் வெளிவரவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும்.










0 comments:
Post a Comment