மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைநெறி மாணவன் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக அழகியல் கற்கைநெறி 3ம் வருட மாணவனான யோ.அமிர்தராஜ் என்பவர் மீதே நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் காயங்களுக்குள்ளான மாணவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு கல்லடி பிரதேசத்திற்கு சென்ற இனந்தெரியாத சிலர் இவரை மிகமோசமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சக மாணவர்கள், தாக்குதலுக்கு இலக்கான மாணவர் நாளை தினம் கிழக்குப் பல்கலைகழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைநெறி மாணவர் ஒன்றியத்தேர்தலில் தலைமை வேட்பாளராக போட்டியிடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.













0 comments:
Post a Comment