Premium WordPress Themes

Thursday, 27 January 2022

மீண்டும் களமிறங்கும் ப்ரியங்கா, கதறும் மைனா.

மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள பிரியங்காவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக பிரியங்கா விளங்கி வருகிறார். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரியங்கா பிரபலமானார். மேலும், இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடுகிறார். அதுமட்டுமில்லாமல் பேட்டியும் கொடுத்திருக்கிறார். அதில் ரசிகர்கள் பலர் நீங்கள் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக எப்ப வரீங்க? என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள்.
அதற்கேற்றார் போல் விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள். ஆனல், பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்

Tuesday, 12 February 2019

உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க இதைச் சாப்பிடுங்க!

உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பல வழிகள் உள்ளது. ஆனால் எவ்வித பக்கவிளைவுகளும் வராமல் இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க சிறந்த உணவுப் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.
பூண்டு
பூண்டை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும்.
ஆப்பிள்
நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்ளான ஆப்பிள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கும்.
சோற்றுக் கற்றாழை
தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன் கொழுப்பும் குறையும்.
கொள்ளு
கொள்ளுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்
மிளகு
வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கி இதனை உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
சீரகம்
தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.
இஞ்சி
இஞ்சியின் தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடித்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். அவரின் முயற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீடாதி ஆகியோர் வழங்கிய ஆதரவும், உதவிகளும் ஆய்வுக் குழுவினரைப் பெரிதும் உற்சாகப்படுத்தியது.
இந்த ஆய்வுக்குழுவில் வரலாற்றுத் துறை தலைவர் எஸ். சிவகணேசன், மற்றும் விரிவுரையாளர் செல்வி கிறிஸ்ரினா நிரோசினி, வரலாற்றுப் பட்டதாரி திரு.வை.சத்தியமாறன் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி தில்லைநாதன் அவர்களும் இணைந்து கொண்டமை ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தின்; சமூக நிலமைகளை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியது. இவ்வாலயம் அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி, குடுவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய ஆலங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இவ்வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்து வரும் பல இடப்பெயர்கள் பண்டுதொட்டு இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததன் அடையாளங்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் தற்போது இங்கு ஒரு தமிழ்க் குடியிருப்பைத் தானும் காணமுடியவில்லை. இந்நிலையில் ஆலயத்தைச் சுற்hடலில் பரந்த அளவில் வாழ்ந்து வரும் ஏனைய இன மக்கள் தமிழர்கள் இங்கு வாழவில்லை எனவும், அவர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இங்கு வந்த போது அவர்களின் வழிபாட்டிற்காகவே முன்பொரு காலத்தில் கட்டப்பட்ட ஆலயமே தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது என அவர்கள் எம்மிடம் கூறிய புதுக்கதை எமக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.
ஏனெனில் இற்றைக்கு ஐந்து சகாப்தங்களுக்கு முன்னரே குடுவில் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்த பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டுக்களில் ஒன்றை ஆதாரமாகக் காட்டி இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் வாழ்ந்த “திஸ” என்ற தமிழ்ப் பெண்ணின் தலைமையில் தமிழ் வணிகர்கள் ஒன்று சேர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி இருந்தார்.
பேராசிரியர் இந்திரபாலா இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கியதற்கு இக்கல்வெட்டையும் முக்கிய ஆதாரமாகக் காட்டுகின்றார். அண்மையில் கிழக்கிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சாசனங்கள் தமிழ் மொழியில், தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் நாகன், ணாகன், தம்பன், வண்ணக்கன் முதலான பெயர்கள் பொறித்த சாசனங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சாசனங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் அண்மையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில்; விரிவாக ஆராய்ந்துள்ளார். இவ்வகையான மட்பாண்டச் சாசனங்கள் தமிழகத்தை அடுத்து கிழக்கிலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றுக்கு புதுவெளிச்சமூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பெருங்கற்காலப் பண்பாடு என்ற புதிய நாகரிகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றனர்.
இப்பண்பாட்டு மக்கள் கிழக்கிலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் நாகன், ணாகன் முதலான பெயர்கள் இடம்பெற்றிருப்பது கிழக்கிலங்கையில் வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் நாக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மேலும் உறுதி செய்வதாக உள்ளது. இவ்வரலாற்றுப் பின்னணியிலேயே அம்பாறை ஆலங்குள ஆலயத்தின் தோற்றத்திற்கான காரணங்களை நோக்குவது பொருத்தமாகும்.
நீண்ட காலத்திற்கு முன்னரே ஆலங்கேணியில் வாழ்ந்த தமிழர்கள் இவ்வாலயத்தைக் கைவிட்டதன் காரணமாக தற்போது இவ்வாலயம் பெருமளவுக்கு அழிவடைந்து ஆலமரங்களுக்கு மத்தியில் வழிபடப்பட முடியாத ஆபத்தைத் தரும் வெறும் கட்டிடமாகக் காணப்படுகின்றது.
ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வளர்ந்துள்ள பெரிய ஆலமரங்களின் கிளைகளும், வேர்களும் ஆலயச் சுவர்கள் சிலவற்றிற்கு பாது காப்பு அரண்களாக உள்ளன.
இவ்வாலயம் சிறிய விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகம், அந்தராளம், முன்மண்டபம், பலிபீடம், கொடிக்கம்பம் என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டதை ஆய்வுக் குழுவினரால் அடையாளப்படுத்த முடிந்தது. நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்வாலயம் பிற்காலத்தில் சீமேந்து கொண்டு மீள் உருவாக்கம் செய்யப்பட்டதை ஆலயத்தின் கட்டிட வடிவங்களும் விமானத்தின் கலை வடிவங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இவ்வாலயம் மிகத் தொன்மையானதென்பதை ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புதையுண்டு காணப்படும் பெருமளவு செங்கற்கள் உறுதிசெய்கின்றன. அதிலும் கற்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றின் உட்பாகங்கள் முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டவையாகக் காணப்படுகின்றன. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அந்தராளத்தின் முன்பக்கச் சுவர் சீமேந்து கொண்டு பூசப்பட்ட நிலையில் செங்கற் சுவர் தெளிவாகக் காணப்படுகிறது.
இந்த வேறுபாடுகளைக் கொண்டு செங்கற்களால் கட்டப்பட்ட கர்பக்கிரகம், அந்தராளம் ஆலயத்தின் தொடக்ககால நிலையில் அதன் வெளிப்புறம் மட்டும் பிற்காலத்தில் சீமேந்து கொண்டு மீள் உருவாகம் செய்யப்பட்டதாகவும், முன் மண்டபம், பலிபீடம் முதலான கட்டிடங்கள் ஆலயம் தோன்றிய கால அத்திவாரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாக அல்லது ஆலயத்தை விரிவுபடுத்த பிற்காலத்தில் சீமேந்து கொண்டு கட்டப்பட்ட ஆலய பாகங்களாக இருக்கலாம் எனக் கூறமுடியும்.
இவ்வாலயத்தின் தோற்றகாலத்தை உறுதியாகக் கூறக்கூடிய கல்வெட்டுக்களோ, விக்கிரகங்களோ இதுவரை கிடைக்கவில்லை.
ஆலயத்தின் கர்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றிற்கு உள் நுளைய முடியாதவாறு பெரிய ஆலமர வேர்கள் காணப்படுகின்றன. அதற்குள் கொடிய விசப்பாம்புகள் குடியிருப்பதற்குரிய தடயங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இதனால் அச்சமின்றி அக்கட்டிடப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வினை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு கர்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகங்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பீடம் முழுமையாக சிதைவடைந்துள்ளமை தெரிகின்றது. அவ்விடம் ஆழமாகத் தோண்டப்பட்டு பீடம் இருந்த இடம் பெரும் குழியாகக் காணப்படுகின்றது.
பீடத்தின் பின்பக்கச் சுவரில் இருக்கும் திருவாசி புகைபடர்ந்த நிலையில் அதன் கலைவடிவங்கள்; தெளிவற்றுக் காணப்படுகின்றன. இருப்பினும் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு இவ்வாலயம் மிகப் பழமையானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. அவற்றுள் கர்பக்கிரகத்தின் மேற்பக்கச் சுவரில் குறுக்காகவைக்கப்பட்ட நான்கு கற்பலகைகள் மீது மேல் நோக்கி வட்டமாக இரு தளங்களில் கட்டப்பட்ட விமானத்தின் அமைப்பு, விமானம் அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அமைப்பும், அவற்றின் நீள அகலங்கள், கர்பக்கிரம், அந்தராளம் என்பவற்றின் வடிவமைப்பு, அவற்றின் நீள, அகலங்கள், வாசற்பகுதிகளில் அமைக்கப்பட்ட அகலமான கற்தூண்கள் என்பன 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொலநறுவை, திருமங்களாய் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சோழர் கால ஆலயங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன.
எதிர்காலத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் இவ்வாலயப் பகுதியில் விரிவான தொல்லியல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் இவ்வாலயத்தின் தோற்றகாலம், அதன் கலைமரபுகள், வழிபடப்பட்ட தெய்வங்கள், காலரீதியான ஆலய வளர்ச்சி, மாற்றம், ஆலயத்திற்கு சொந்தமாக இருந்த அசையும், அசையாத சொத்துக்கள், ஆலயத்தைப் பராமரித்த மக்கள், வழிபாட்டு மரபுகள் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.
நன்றி  tamilcnn & சிரேஸ்ர பேராசிரியர்
ப.புஸ்பரட்ணம்
தொல்லியல் – வரலாறு
தலைவர்
வரலாற்றுத்துறை.

Saturday, 19 March 2016

ஹரிஷ்ணவியின் படுகொலை;சந்தேகநபரின் இரத்த மாதிரியை மரபணு பரிசோதனைக்கு.

வவுனியா – விபுலானந்தா வித்தியாலய மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார்.
விபுலானந்தா பாடசாலையில் கல்விகற்றுவந்த 14 வயதுடைய உக்குளாங்குளத்தைச் சேர்ந்த ஹரிஷ்ணவி என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டவாறு அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பாலசிங்கம் ஜனதன் என்ற நபரை சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரின் இரத்த மாதிரியை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் அறிவித்தனர்.
அதேவேளை மாணவி ஹரிஷ்ணவியின் கொலை தொடர்பில் அவசர மரண விசாரணையை நடத்திய அதிகாரி எஸ். கிஷோர், நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கையின்படி மாணவி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய வழக்கு விசாரணையின்போது சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி ஒருவர் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர்  தக்வா நகர் கிராமத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதையுடைய எம். அப்துல் றஸ்ஸாக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிணற்றுக்கு நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது  அவர் ஏற்கனவேஉயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2015 G.C.E. O/L பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது

2015 G.C.E. O/L பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது. http://www.doenets.lk என்ற இணையத்தில் பார்க்கவும்.

Friday, 14 June 2013

விடுதலை புலிகளின் நிறுவனங்களை அவதானிக்குமாறு ஜேர்மனியிடம் இலங்கை வலியுறுத்தல்!


ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறும் வகையில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகப்பு நிறுவனங்களை கூர்ந்து அவதானிக்கும்படி ஜேர்மனியிடம் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வேளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்ரவெலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கத்தின் பல முகப்பு நிறுவனங்கள் சமுதாய நிறுவனங்கள் என்ற போர்வையில் ஜேர்மனியில் இயங்குவதாக சுட்டிக்காட்டினார்.
இந்த குழுக்கள் பிரசாரத்துக்காகவும் நிதி சேகரிப்பதற்காகவும் பல பாடசாலைகளை நடத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றி விளக்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கு தான் விரும்பிய வகையில் தேவையான காலமெடுத்து அதனை செயற்படுத்தும் உரிமை உள்ளதென கூறினார்.
பெருமளவிலானோர் கலந்துகொண்ட வெளிநாட்டு கொள்கைக்கான ஜேர்மன் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பீரிஸ், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் காணப்பட்ட புதிய போக்குகள் பற்றி பல பிரச்சினைகளை பிரஸ்தாபித்தார். புறவயமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார். முனித உரிமைகள் தொடர்பில் காணப்பட்ட அண்மைய தலையீடுகளில் புறவயமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதா எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒரு நாடு கொண்டுவந்த போது அதற்கு ஆதரவு இருக்கவில்லை. இதனால், அதனை முன்னெடுக்க முடியாமல் இருந்தபோது வேறு ஒரு நாடு இந்த தீர்மானத்தை கொண்டுவந்தபோது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது எனவும் அமைச்சர் பீரிஸ் இதன்போது குறிப்பிட்டார்.