மட்டக்களப்பு – ஏறாவூர் தக்வா நகர் கிராமத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதையுடைய எம். அப்துல் றஸ்ஸாக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிணற்றுக்கு நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது அவர் ஏற்கனவேஉயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










0 comments:
Post a Comment